அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் பியர் புனித சதாசகாய மாதா ஆலயத்தில் பக்தர்கள் சுதந்திரமாக வழிபட வேண்டும்-பிரதமரிடம் தவிசாளர் முஜாஹிர்

தலைமன்னார் பியரில் அமைந்துள்ள புனித சகாசாய மாதா ஆலயத்துக்கு அப்பகுதி கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் சுதந்திரமாக சென்று வழிபட கடற்படையினர் அவ் ஆலய பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் பிரதமரிடம் இவ் வேண்டுகோளை விடுத்தார்.

மன்னார் மாவட்டத்தில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான
மீளாய்வுக்கூட்டம்  கடந்த வெள்ளிக் கிழமை (15.02.2019)  பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இவ் கூட்டத்தில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர்
பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கையில் யுத்தம் முடிந்து தற்பொழுது
நல்லிணக்க அரசு ஆட்சியில் இருக்கின்ற இவ்வேளையில் எங்கள் எல்லை
பகுதிக்குள் இருக்கும் தலைமன்னார் பியரில் கத்தோலிக்க மக்களின்
புனித.சதாசாகாய மாதா ஆலயத்தை தலைமன்னார் பியர் கடற்படையினர் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ் ஆலயத்துக்குச் செல்லும் அவ் கிராம மக்களோ அல்லது பத்தர்களோ அவ்
ஆலயப்பகுதிக்குள் சுதந்தரமாகச் சென்று வழிபட முடியாத நிலை இருந்து
வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஆகவே இவ் ஆலய பகுதியை கடற்படையினர் பொது மக்கள் தாங்கள் விரும்பிய நேரங்களில் அப் பகுதிக்குச் சென்று வழிபட ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அத்துடன் மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட அதிகமான மக்கள் வாழும் பேசாலை பகுதியில் ஒரு பொருத்தமான சந்தை தொகுதியில்லாததால் நுகர்வோர் பெரும் அசௌரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆகவே இவற்றையும் கவனத்தில் எடுத்து இவ் இரு பிரச்சனைகளுக்கும்
தீர்ப்பதற்கான ஆவண செய்யுமாறு மன்னார் பிரதேச சபை தவிசாளர் பிரதமரிடம் வேண்டிக் கொண்டார்.

தலைமன்னார் பியர் புனித சதாசகாய மாதா ஆலயத்தில் பக்தர்கள் சுதந்திரமாக வழிபட வேண்டும்-பிரதமரிடம் தவிசாளர் முஜாஹிர் Reviewed by Author on February 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.