அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இளைஞர் யுவதிகளுக்கு புதிய கற்கைநெறி மன்னாரில்...



இலங்கை திறந்த பல்கலைக்கழகம்-மன்னார் கற்கை நிலையம்


முன் பிள்ளைப்பருவ மற்றும் ஆரம்பக் கல்வியில் டிப்ளோமா மற்றும் பட்டமாணி (சிறப்பு)
Bachelor of Education (Honours) in Primary Education கற்கை நெறி நிகழ்ச்சித்திட்டத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளல் 2019-2020

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பிள்ளைப் பருவ மற்றும் ஆரம்பக் கல்வித்துறையினர் வழங்கும் மேற்படி கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் விசேட குறிக்கோள்களாக சேவை வினைத்திறன் மிக்க  ஆசிரியர்கள்/சேவை வழங்குனர்கள் மற்றும்  முன் பிள்ளைப்பருவ மற்றும் ஆரம்ப கல்வித்துறையினரின்  உருவாக்குதலை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
(அ) மட்டம்-III  
இவ் முன் பிள்ளைப்பருவ மற்றும் ஆரம்ப கல்வியில் சிறப்பு பட்டமாணி கற்கை நெறிக்கான காலமானது 4 வருடங்களாகும். இப் பட்டமாணி கற்கை நெறியினை மாணவர்கள் தமிழ் மொழியில் கற்று கொள்ளமுடியும். இக் கற்கை நெறியினை மாணவர்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழக மன்னார் கற்கை நிலையத்தில் தொடரமுடியும்.

அனுமதித் தகைமைகள்
(1)    விண்ணப்ப முடிவு திகதி அன்று விண்ணப்பதாரிகள் 18 வயதினைப் பூர்த்தி செய்தவர்களாக அல்லது அதற்கு மேற்பட்ட வயதினையுடையவர்களாக இருத்தல் வேண்டும்.
(2)    இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட முன்பள்ளி உயர்  கல்விச் சான்றிதழ் மட்டம் 2 நிகழ்ச்சித்திட்ட பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது
(3)    கல்விப் பொதுத் தராதர (சா/த) பரீட்சையில் முதல் மொழி மற்றும் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியும் கல்விப் பொதுத் தராதர (உ/த) பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியும் பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
(4)    இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட அடிப்படை மட்டங்கள்I IIஇல் குறைந்தது 54 திறமை மட்டங்கள்        (2017/2018 கல்வியாண்டுக்கு முன்னர்)  36 திறமை மட்டங்களில் (2017/2018 கல்வியாண்டுக்கு பின்னர் ) உரிய பாடநெறிகளில் சித்திகள் பெற்றிருத்தலுடன் கல்விப் பொதுத் தராதர (சாÆத) பரீட்சையில் முதல் மொழி-கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும். அல்லது
(5)    தேசிய கல்வியற் கல்லூரிகளினால் (இலங்கை) வழங்கப்பட்ட கற்பித்தலில் டிப்ளோமா சான்றிதழ். அல்லது
(6)    ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளினால் (இலங்கை ) வழங்கப்பட்ட ஆசிரிய பயிற்சி சான்றிதழ்.
விண்ணப்பதாரிகள் 10-03-2019 அன்று இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தெரிவு பரீட்சைக்கு தோற்றுதல் வேண்டும். 
(ஆ) மட்டம் V (டிப்ளோமா கற்கைநெறி நிகழ்ச்சித்திட்டத்தினை பூர்த்திசெய்தவர்கள்)

அனுமதித் தகைமை
1.    இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் முன்பள்ளிப்பருவ மற்றும் ஆரம்பக்கல்வி டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்திசெய்து சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
மாணவர்கள் தாம் மட்டம் 3/4 ஆகிய மட்டங்களில் கற்ற மொழிமூலகங்களிலேயே மட்டம் 5/6 என்பவற்றையும் பயில வேண்டும். 
www.ou.ac.lk என்ற இணைய தளத்தில் பிரவேசித்து.குறிப்பிட்ட பாடநெறிகள் தொடர்பான விபரங்கள் அடங்கிய கைந்நூலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கும் மேலதிக விபரங்களை பெற்று கொள்வதற்;கும் இலங்கை திறந்த பல்கலைக்கழக மன்னார் கற்கை நிலையத்தினை அணுகவும். மேலும் பின்வரும் இலங்கை திறந்த  பல்கலைக்கழக இணையத்தளத்திற்கு சென்றும் விண்ணப்பிக்க முடியும்.payment.ou.ac.lk/


விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்;கான காலம் - 03.02.2019 தொடக்கம் 26.02.2019 வரை 
விண்ணப்பபடிவ கட்டணம்  -  600/=(மட்டம்III)   


விண்ணப்பபடிவ கட்டணம்    -  350/= (மட்டம்  V)

மேலதிக தொடர்புகளுக்கு
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.
மன்னார் கற்கை நிலையம்.               
RDA கட்டிடம். சிறிய குருமட வீதி- சாவற்கட்டு- மன்னார்
0232251999 / 0775625352


மன்னார் இளைஞர் யுவதிகளுக்கு புதிய கற்கைநெறி மன்னாரில்... Reviewed by Author on February 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.