அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண ஆளுனரின் மன்னாருக்கான முதல் விஜயத்தின் போது செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்ட மன்னார் ஊடகவியலாளர்கள்-படம்


வடமாகாண ஆளுனராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுரேன் ராகவனின் மன்னார் மாவட்டத்திற்கான முதல் வருகை இன்று ஞாயிற்றுக்கிழமை 10-02-2019 காலை இடம் பெற்ற போதும், மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் குறித்த கலந்துரையாடலின் போது செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை.

-வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை 10 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொள்ள இருந்த நிலையில்,மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் அழைக்கப்பட்ட அதிகாரிகளான உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள், மன்னார் ,நானாட்டான், முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகியவற்றின் பிரதேசச் செயலாளர்கள், மாவட்டத்தில் உள்ள கிராம அலுவர்கள் என அனைவருக்கும் குறித்த நேரத்திற்கு சமூகம் அழிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

-இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை 10 மணிக்கு வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் வருகை தருவதாக இருந்த போதும்,நீண்ட நேரத்தின் பின்னரே அவரது வருகை அமைந்திருந்தது.

-இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் குறித்த கூட்டம் ஆரம்பமானது.

இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களும் அங்கே சமூகமளித்திருந்தனர்.அரசாங்க அதிபரின் ஆரம்ப உரை இடம் பெற்ற போது ஆளுனருடன் வருகை தந்த பிரத்தியேக செயலாளர் என கூறப்படுபவரினால் ஊடகவியலாளர்களை மண்டபத்தில் இருந்து வெளியில் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,குறித்த செயலாளர் ஆளுனரின் பாதுகாப்பு பிரிவினரை வைத்து ஊடகவியலாளர்களை வெளியேற்ற நடவடிக்கைகளை டேற்கொண்டனர்.

இதனால் ஊடகவியலளார்கள் அங்கிருந்து வெளியேறினர்.வடமாகாண ஆளுனராக முன்னர் இருந்த ரெஜீனோல்ட் குரோ அவர்களின் காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு இருந்த சுதந்திரம் தமிழராக தற்போது ஆளுனராக  நியமிக்கப்பட்டவரின் காலத்தில் இல்லை என ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
 

 









வட மாகாண ஆளுனரின் மன்னாருக்கான முதல் விஜயத்தின் போது செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்ட மன்னார் ஊடகவியலாளர்கள்-படம் Reviewed by Author on February 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.