அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரிலிருந்து காபன் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளிவரலாம் சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஐபக்ஷ.

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட
மாதிரி எலும்புகூடுகளின் காபன் பரிசோதனையின் முடிவுகள் எதிர்வரும்
வெள்ளிக் கிழமை (08.02.2019) அமெரிக்க புளோரீடா நிறுவனத்திலிருந்து
கிடைக்கப் பெறாலாம் என மன்னார் சதொச வளாகத்தில் அகழ்வு செய்யப்படும் புதைக்குழிக்கு பொறுப்புவாய்ந்த சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஐபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் சதொச வளாகத்தில் கடந்த வருடம் (2018) மார்ச் மாதம்
கண்டுபிடிக்கப்பட்டடு மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழியான அகழ்வுப் பணி நேற்று புதன் கிழமை (06.02.2019) 139 வது தினமாக அகழ்வுப் பணி
நடைபெற்றது.

இது விடயமாக இவ் அகழ்வுப் பணிக்கு பொறுப்புவாய்ந்த அதிகாரியான சட்ட
வைத்திய அதிகாரி சமிந்த ராஐபக்ச தெரிவிக்கையில் இதுவரைக்கும் இவ்
அகழ்வுப் பணியானது 139 தினங்களாக நடைபெற்று வருகின்றது.

இதுவரைக்கும் 312 மனித எலும்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டதில் 297
எலும்புக்கூடுகள் குழிக்குள் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. இவற்றில் 26
சிறுவர்களுடையதாக காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் எவ்வளவு நாட்கள் இவ் பணி தொடரும் என கூறமுடியாது. அகழ்வு
செய்யும் இடங்களில் எலும்புக்கூடுகள் தென்படுவதால் விரைவில் முடிக்கும்
நோக்குடன் பணியை துரிதப்படுத்தி வருகின்றோம் என்றார்.

தங்களால் அமெரிக்காவிலுள்ள புளோரீடா நிறுவனத்துக்கு காபன் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட மாதிரி எலும்புக்கூடுகளின் முடிவுகள் எதிர்வரும் 08.02.2019 அன்று கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.




மன்னாரிலிருந்து காபன் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளிவரலாம் சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஐபக்ஷ. Reviewed by Author on February 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.