அண்மைய செய்திகள்

recent
-

சிவன் ஆலயத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கையின் தொன்மைமிக்க வரலாறு -


பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க சிவன் ஆலயத்திலிருந்து இலங்கையின் வரலாறு சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆலயத்தின் பகுதியொன்றை மீள புனரமைப்பதற்காக உடைக்கும் போது உலோக பெட்டகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் அடிப்பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றும் வேறும் சில கட்டடங்களின் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்று சான்றுகளின் கண்டுபிடிப்பு தொடர்பில் மத்திய கலாச்சார நிதியத்தின் பொலன்னறுவை அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரலாற்று சிறப்புமிக்க சிவன் ஆலயத்தின் சுவர் பகுதி உடைந்துள்ளது. அதனை சரி செய்யும் நோக்கில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கண்டுபிடிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரங்களில் நீலம் மற்றும் சிவப்பு நிறத்திலான நிறப்பூச்சு பூசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரம்பரியமிக்க இந்த கட்டடங்கள் பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களின் மூலம் இலங்கையின் பல்வேறு வரலாறுகளை கண்டுபிடிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சிவன் ஆலயத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கையின் தொன்மைமிக்க வரலாறு - Reviewed by Author on February 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.