அண்மைய செய்திகள்

recent
-

சுதந்திரம்.......சுதந்திரம்.....

சுதந்திரம்.......சுதந்திரம்.....

சுதந்திரம் சுதந்திரம்
சுந்தர    தமிழுக்கும்
அந்தரத்தில் வாழும் தமிழர்க்கும்
சுதந்திரம் -இல்லப்பா சுதந்திரம்

சூழ்ச்சியால் சுய ராஜ்ஜிய  கனவும்
சுடரான நினைவுகள் நெஞ்சோடு
சுட்டெரிக்கும் போது-தமிழர்களுக்கு
சுதந்திரமாம்.....சுதந்திரமாம்........

அன்னை நாட்டிலும் அகதிகள் தான்
அந்நிய நாட்டிலும் அகதிகள் தான்
அண்ணின் அரசு வரும் வரை
அடிமைத்தலைமைகளின் அற்ப சலுகைகளுக்காய்-தமிழர்களின்
அபிலாசைகள் .....அங்காடிகளில்....

அன்று சுதந்திரமாய் சுவாசித்தோம்
இன்று சுவாசிக்கவே சுதந்திரம் தேவை...
என்றும் இது நிலைக்காது -புதியதாய்
தோன்றும் தமிழீழம் சுதந்திரமாய்

விடுதலையும் விடுமுறையில்.....
வீரம் விளைந்த மண்ணில்
விடுதலை மறவர்களின் -உயிர் தியாகம்
வீறு கொண்டு எழும் பெரும் பகை அறுந்து விழும்

விண்ணிலும் மண்ணிலும்
வீற்றிருப்பாள் தமிழ் அன்னை
வீர வேங்கைகளின் வெற்றி
வியர்வையில் விடியும் தமிழீழம் மலரும்.
சுதந்திரம்.......சுதந்திரம்.....

-தமிழ்மாடு-


சுதந்திரம்.......சுதந்திரம்..... Reviewed by Author on February 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.