அண்மைய செய்திகள்

recent
-

பூமியைக் காக்க சுவிட்சர்லாந்து செய்யும் முன்னுதாரணமான செயல் -


உலகுக்கே முன்னுதாரணமாக திகழும் வகையில் சுவிட்சர்லாந்து நகரம் ஒன்று பூமியைக் காப்பாற்றுவதற்காக அளப்பரிய செயல் ஒன்றை செய்து வருகிறது.

சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும், ஒரு மரம் நடும் வழக்கம் இருக்கிறதாம்.
அதுவும் இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, 17 ஆண்டுகளாக இந்த வழக்கம் தொடர்வதாக பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஒரு மரம், ஒரு குழந்தை என்னும் இந்த திட்டம், நகரத்தின் குடிமக்களுக்கும் காடுகளுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகும்.

என்றாலும் ஒரு குழந்தைக்கு ஒரு மரம் என்று நடப்பட்டால் கூட, வெளியாகும் கார்பன் டை ஆக்சைடின் அளவை சமன்படுத்த முடியாது.
சராசரியாக சுவிட்சர்லாந்தில் வாழும் ஒரு குடிமகன் தனது வீட்டிலிருந்து வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவு 357 டன்கள் ஆகும்.
அப்படியானால் ஒரு குழந்தைக்கு, 357 மரங்கள் நட்டால்தான் இந்த கார்பன் டை ஆக்சைடின் அளவை சமன் செய்ய முடியும்.

என்றாலும் காடுகளுக்கு மக்களைக் கொண்டு வரும் நோக்கம், அவற்றைப் பாதுகாப்பதற்கான முதல் படி என்கிறார்கள் வனத்துறையினர்.

பூமியைக் காக்க சுவிட்சர்லாந்து செய்யும் முன்னுதாரணமான செயல் - Reviewed by Author on February 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.