அண்மைய செய்திகள்

recent
-

தாய்லாந்தில் இதுதான் முதல் முறை! பிரதமர் தேர்தலில் களமிறங்கும் திருநங்கை -


தாய்லாந்து நாட்டில் பிரதமர் தேர்தலில் முதல் முறையாக திருநங்கை வேட்பாளர் ஒருவர் களமிறங்கி உள்ளார்.

அடுத்த மாதம் 24ஆம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக தாய்லாந்து நாட்டில் முக்கிய காட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் தேர்தலில் 3 பிரதான வேட்பாளர்களில் ஒருவராக முதல்முறையாக திருநங்கை வேட்பாளர் பவுலின் காம்ப்ரிங் களமிறங்க உள்ளார். இவர் அந்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான மகாசோன் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.
தேர்தலுக்காக தற்போது பவுலின் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் குறித்து பவுலின் காம்ப்ரிங் கூறுகையில்,
‘நீங்கள் ஒரு திருநங்கையா என்று மக்கள் என்னை பார்த்து ஆச்சரியமடைகின்றனர். நீங்கள் பிரதமராக வேண்டுமே என்றும் கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள் கேள்விகளில் கிண்டல் இருக்கலாம். ஆனால், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.



நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. முதலில் நீங்கள் உங்களை காதலிக்க வேண்டும். அந்த அன்பை மற்றவர்களிடத்திலும் பகிர வேண்டும். நான் பிரதமராக ஆவேனா இல்லையா என்பது முக்கியம் இல்லை.
இதற்கு சிறிது காலம் எடுக்கலாம். திருநங்கைகள் அரசியலில் ஜொலிப்பார்கள். நிச்சயம் பிரதமராகவும் ஆவார்கள். நான் ஆகாவிட்டாலும் எதிர்காலத்தில் இது நடக்கும்’ என தெரிவித்துள்ளார்.
பினித் காம்ப்ரிங் என்ற பெயரில் ஆணாக இருந்த பவுலின் காம்ப்ரிங், இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாவார். அவர் பத்திரிகையாளராகவும், தொழிலதிபராகவும் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன் பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தில் இதுதான் முதல் முறை! பிரதமர் தேர்தலில் களமிறங்கும் திருநங்கை - Reviewed by Author on February 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.