அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுள்ள ஈழத் தமிழ் பெண் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!


இந்த ஆண்டுக்கான உலக ஆசிரியர் விருது பெறுவோருக்கான இறுதிப்பட்டியலில் உலகின் பத்து முன்னணி ஆசிரியர்களில் ஒருவராக வந்திருக்கும் அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த இளம் தமிழர் யசோதை செல்வகுமாரன் தெரிவாகியுள்ளார்.

இந்நிலையில், யசோதை செல்வகுமாரன் குறித்த மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

“இந்த விருது ஆரம்பிக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டுகளாகின்றன. உலகின் 179 நாடுகளிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறந்த நியமனங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பத்து ஆசிரியர்களில் யசோதையும் ஒருவர்.
இந்த முன்னணிப் பட்டியலுக்குள் வந்தமை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களைப் பரிசாகப் பெறும் வாய்ப்பையும் அவருக்குத் திறந்துவிட்டிருக்கிறது.
முழுமையாக அவர் அதை எட்டதவறினாலும் கூட இது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்குக்கும் அவரது பாடசாலைச் சமூகத்தினருக்கும் கிடைத்த பெரும் அங்கீகாரமாகும்.

இந்த உச்ச விருது வரும் பங்குனி 24ஆம் திகதி அறிவிக்கப்படும். சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள ரூற்றிஹில் உயர்பாடசாலையில் அவர் பணிபுரிகிறார்.

இலங்கையில் பிறந்து சிறு குழந்தையாக அவுஸ்திரேலியாவில் குடிபுகுந்த அவர், மருத்துவமும் சட்டமும் கணக்கியலும் என்று பரபரக்கும் புலம்பெயர் தமிழ் சமூகத்தில் ஆசிரியத் துறையைத் தெரிவு செய்தார்.
மனிதம் தவித்த ஒரு பின்னணியில் வந்து தொடர்ந்தும் அவை தொடர்பான நிகழ்வுகளில் ஈடுபட்டு வந்ததால் கணிதம், பௌதிகம், இரசாயனம் போன்ற தமிழ்ப் பின்னணி ஆசிரியர்களின் வழி விலகி வரலாறு, புவியியல், சமூகமும் பாரம்பரியமும் போன்ற சமூகவிஞ்ஞானப் பாடங்களையே அவர் கற்பித்திருக்கிறார்.

போதனை - படிப்பித்தல் என்பவற்றுக்கு மேலாக கல்வி - கற்கை சார்ந்த பல புதிய முயற்சிகளை அவர் செய்திருக்கிறார். இணைந்த கல்வி முறைகள், அறிவுசார் வழிகாட்டல் போன்றவற்றில் அவர் எடுத்த முயற்சிகளும் பரவலான அங்கீகாரம் பெற்றுள்ளன.
பிரகாசமான மாணவர்கள் தெரிவுசெய்யும் பாடசாலைகளில் இவற்றைச் செய்வது இலகுவாக இருக்கலாம்.

ஆனால் அவரது ரூற்றிஹில் உயர்பாடசாலை வருமான மட்டம் குறைந்த குடும்பங்களிலிருந்தும் அண்மைக்காலங்களில் அவுஸ்திரேலியா வந்த குடும்பங்களிலிருந்தும் அழைப்புக்கு கலாசாரக் குடும்பங்களிலிருந்தும் வரும் மாணவர்களைக் கொண்ட ஒன்றாகும்.
இவ்வாறான ஓர் ஆசிரியர் சர்வதேச மட்டத்தில் முழுமையான அங்கீகாரம் பெறுவது சாலவும் பொருந்தும்.
சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுள்ள ஈழத் தமிழ் பெண் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்! Reviewed by Author on February 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.