அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயரின் (26) ஊடக அறிக்கைக்கு விளக்கம் அளித்து திருக்கேதீச்சர நிர்வாகத்தினர் விளக்கம் அளித்து பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்

மன்னார் ஆயரின் (26) ஊடக அறிக்கைக்கு விளக்கம் அளித்து திருக்கேதீச்சர நிர்வாகத்தினர் விளக்கம் அளித்து பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்

 இந்த அறிக்கையானது திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச்சபையின் இணைச் செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களால் இன்று(28)வெளியிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் அதி வணக்கத்துக்குரிய மன்னார் மாவட்ட ஆயர் அவர்களுக்கு தங்ஙகளுடைய 26.3.2019 ஊடக அறிக்கை தொடர்பாக சில விடயப்பரப்புகளை தெளிவு படுத்த வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.

திருக்கேதீச்சரத்தில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவானது கடந்த 4 வருடங்களாக அவ்விடத்திலேயே இருந்தது இது லூர்து மாதா ஆலயம் திறக்கப்படுவதற்கு முன்னமே அவ்விடத்தில் போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இது லூர்து மாதா ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள வளைவு என்பது உண்மைக்குப் புறம்பானது இவ்வளைவானது மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் செல்லும் பாதையிலேயே அமைக்கப்பட்டிருந்தது லூர்து மாதா ஆலயத்திற்கு முன்பாக இல்லை என்பதை நாம் தெளிவாக கூறுகின்றோம் ஆலய வளைவு பதைதைகள் பழுதடைந்த நிலையிலும் கம்பிகள் துருப்பிடித்திருந்த நிலையிலும் அவற்றை மாற்ற வேண்டி இருந்ததால் அதே இடத்தில் அதே அளவிளான வளைவு ஒன்றினை அமைக்க முற்பட்ட போது அங்கு குழுமிய கத்தோலிக்க மதத்த சார்ந்த சிலரால் இவ்வளைவு இவ்விடத்தில் அமைக்க விடமாட்டோம் என தெரிவிக்க இதை அறிந்து அங்கு வந்த செ.இராமகிருஷ்ணன் திரு ஏ.ஐ. தயானந்த ராஜாவுடன் அவ்விடத்தில் நின்ற பங்குத் தந்தை கலந்துரையாடிய போது 'நான் இங்கு வந்து சில காலமே ஆகுவதாகவும் இது பற்றி நான் குரு முதல்வர் விக்டர் சோசை அடிகளார் அவர்களுடன் கதைப்பதாகவும் கூறினார்'' தவிர வளைவு அமைப்பது தொடர்பாக எவ்வித இணக்கப்பாடும் பற்றி பேசப்படவில்லை அத்துடன் அவ்விடத்தில் வளைவு அமைக்கும் அபாழுது ஏ.பி.சி. கலவைத்தூள் போடப்பட்டதே தவிர கொங்ரீட் கலவை எதுவும் போடப்படவில்லை அத்தோடு சம்பவ இடத்தில் கத்தோலிக்கக் குருக்கள் யாரும் பிரசன்னமாக இருக்கவில்லை என்பதும் பிழையான செய்தியே இது தொடர்பாக ஏற்கனவே புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது

 இது தொடர்பாக மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோih அடிகளார் அவர்களின் அறிக்கைளிலும் முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வந்ததை நாம் சுட்டிக்காட்டி நாம் ஏற்கனவே அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தோம் எனவே தொடர்ச்சியாக உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பதை தங்களது கவனத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்று திருக்கேதீச்சர திருப்பணிச்சபையிரின் மன்னார் ஆயர் அவர்களுக்கான மறுப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

மன்னார் ஆயரின் (26) ஊடக அறிக்கைக்கு விளக்கம் அளித்து திருக்கேதீச்சர நிர்வாகத்தினர் விளக்கம் அளித்து பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் Reviewed by Admin on March 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.