அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் வரலாற்றில் உயரிய கௌரவம் பெறும் மான்புறும் உயர் மனிதர்கள்...


">தாயகத்தின் ஆளுமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு ஐ.பி.சி தமிழ் ஊடக குழுமத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தது.
வலம்புரி விருந்தினர் விடுதியில் மாலை மூன்று மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் தாயகத்தின் ஏராளமான படைப்பாளிகள், கல்விமான்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலதரப்பட்டோரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததுடன் தமிழினத்தின் ஆளுமைகளாகத் திகழும் ஐம்பது படைப்பாளிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் முதல்வர் கந்தையா பாஸ்கரனின் சிந்தனையில் உதயமான இந்த மகத்தான நிகழ்வு தாயகத்தின் கலைஞர்களை தட்டிக்கொடுத்து அருகிவரும் தமிழரின் கலைகளையும் படைப்பாக்கங்களையும் முன்னுக்குக் கொண்டுவருவதாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது கருத்துத் தெரிவித்த முதல்வர் கந்தையா பாஸ்கரன்,
”போர்க்காலத்தில் ஏராளமான கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்ட உங்களை கௌரவிப்பதில் ஐ.பி.சி தமிழ் ஊடகம் பெருமையடைகிறது.
எதிர்காலத்திலும் இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுத்து தட்டிக்கொடுப்பதற்கு ஐ.பி.சி தமிழ் ஊடகம் என்றுமே தயாராக இருக்கிறது.” என்றார்.

ஆளுமை துறைபெயர்
வாழ்நாள் சாதனையாளர்திரு .இரத்தினம் சிவலிங்கம்
வாழ்நாள் சாதனையாளர்திரு .குழந்தை ம. சண்முகலிங்கம்
வாழ்நாள் சாதனையாளர்வண. நிக்லஸ்பிள்ளை மரிய சேவியர் அடிகளார்
வாழ்நாள் உரிமை போராட்ட ஆளுமைவண. ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை
மூத்த ஊடக ஆளுமை திரு . மருதப்பு வல்லிபுரம் கானமயிலநாதன்
பன்முக ஊடக ஆளுமை திரு .சண்முகராசா யோகரெத்தினம்
மூத்த ஆளுமைநடனம்திருமதி .சாந்தினி சிவநேசன்
மூத்த ஆளுமைவீணைதிருமதி .ராஜேஸ்வரி தெட்சணாமூர்த்தி
மூத்த ஆளுமைநாட்டுக்கூத்துதிரு .குழந்தை செபமாலை
மூத்த ஆளுமைபாரம்பரிய விளையாட்டுதிரு .கந்தப்பிள்ளை சின்னத்தம்பி
மூத்த ஆளுமை நாதஸ்வரம்திரு. கோதண்டபாணி பஞ்சரத்னம் ( வி கே பஞ்சமூர்த்தி )
மூத்த ஆளுமைமிருதங்கம்திரு பண்டாரம் .சின்னராசா
மூத்த ஆளுமை ஓவியக்கலைதிரு . ஆசை இராசையா
மூத்த ஆளுமைசிற்பக்கலைதிரு . வைதீஸ்வரன் சிவசுப்ரமணியம் (ரமணி )
மூத்த ஆளுமைஉளவளம்திரு .செபஸ்தியான்பிள்ளை ஜோசப்பாலா
மூத்த ஆளுமை தவில்திரு . இராசு புண்ணியமூர்த்தி
மூத்த ஆளுமை மொழிபெயர்ப்புதிரு .ஏ. P. ஜோசப் ( அருளானன் )
மூத்த ஆளுமை இசைதிரு . முத்துகுமாரு கோபாலகிருஷ்ணன்
மூத்த ஆளுமை கலை பண்பாட்டு ஆய்வுபேராசிரியர் சின்னையா மொளனகுரு
மூத்த ஆளுமை பாடல்திருமதி. பார்வதி சிவபாதம்
மூத்த ஆளுமை வரலாற்று ஆய்வுதிரு. அருணா செல்லத்துரை
மூத்த ஆளுமை தொல்லியல் ஆய்வுபேராசிரியர் பரமு புஷ்பரட்ணம்
மூத்த ஆளுமை நடிப்புதிரு .சுப்ரமணியம் லோகநாதன்
மூத்த ஆளுமை நாவல்திரு .நா.யோகோந்திரநாதன்
மூத்த ஆளுமைபயிற்றுவிப்பாளர் (தற்காப்புக்கலை)திரு. மா. இரத்தினசோதி
பெண்ணாளுமை திருமதி. தமயந்தி சிவசுந்தரலிங்கம் (தமிழ் கவி)
பன்முக ஆளுமைதிருமதி கோகிலாதேவி மகேந்திரராஜா
பன்முக ஆளுமைதிரு .சுப்ரமணியம் பத்மநாதன்
சிறப்பு ஆளுமைசட்ட உதவிதிரு .சண்முகரெட்ணம் இரட்ணவேல்
சிறப்பு ஆளுமைபுகைப்படக்கலைதிரு . சிவராஜதேவா விஜயதுஸ்யந்தன்
சிறப்பு ஆளுமைகுழந்தை இலக்கியம்கலாநிதி ஓ.கே.குணநாதன்
சிறப்பு ஆளுமைபழம் தமிழ் இலக்கியம்திரு.நா தர்மராசா ( அகளங்கன் )
சிறப்பு ஆளுமைகவிதைதிரு .உதுமாலெவ்வை முகம்மது அதீக்( சோலைக்கிளி )
சிறப்பு ஆளுமைபோர்க்கால இலக்கியம்செல்வி. வேலு சந்திரகலா
சிறப்பு ஆளுமைநாடகம்நாகமுத்து செல்வம் ( புதுவை அன்பன் )
சிறப்பு ஆளுமைஒளிப்பதிவுதிரு .செல்லப்பிள்ளை ஜெயராசா (வரதன்)
சிறப்பு ஆளுமைநிகழ்ச்சி தயாரிப்பாளர்கி . இரவிச்சந்திரன் ( கருணை ரவி )
சிறப்பு ஆளுமைசமூக செயட்பாட்டாளர்திரு வெள்ளயன் சுப்ரமணியம்
சிறப்பு ஆளுமைதமிழ் அறிவியல்திரு .இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்
சிறப்பு ஆளுமைமருத்துவ சேவைவைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி
சிறப்பு ஆளுமைதாயக திரைதிரு .நவரட்ணம் கேசவராஜன்
சிறப்பு ஆளுமைநெடும் தொடர்திரு .அபயன் கணேஷ்
சிறப்பு ஆளுமைவிளையாட்டு (உதைபந்தாட்டம்)திரு. வைரமுத்து தர்மகுலநாதன்
சிறப்பு சாதனைசத்தப்பந்துதிரு. முருகன் மோகன்ராஜ்
சிறப்பு சாதனைவிளையாட்டு(வலைப்பந்தாட்டம் )செல்வி .தர்ஜினி சிவலிங்கம்
சிறப்பு சாதனைபேச்சுதிரு .நமசிவாயம் விஜயரட்ணம் (மணலாறு விஜயன் )
சிறப்பு சாதனைசூழல் நேயம்பசுமை இயக்கம் திருகோணமலை
சிறப்பு சாதனைஅறிவிப்பாளர்திரு .நடராசா இராமநாதன் ( கோகுலன் )
சிறப்பு சாதனைகாப்பியம்திரு .ஜின்னா சரிபுத்தீன்
சிறப்பு சாதனை நுண்கலை திரு .எபனேசர் நேசராஜ் உவோட்ஸ்வேர்த்
தமிழர் வரலாற்றில் உயரிய கௌரவம் பெறும் மான்புறும் உயர் மனிதர்கள்... Reviewed by Author on March 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.