அண்மைய செய்திகள்

recent
-

உடலில் இருக்கும் சளியை விரைவில் போக்க வேண்டுமா?


மழைக்காலம் வந்து விட்டாலே போது சிறுவர்கள் முதல் பெரியவர்களை சளி ஒட்டி கொள்கின்றது.

சளி சவ்வுகளில் உள்ள சளி சுரப்பி செல்களில் உற்பத்தியாகிறது.
மூக்கில் இருந்து வரும் சளி (தீவிரமான சீழ் மிக்க நாசியழற்சி) நிறம்மாறி இருந்தால் அதன் பயன்பாடு இன்னும் அதிகமாக உள்ளது. இருப்பினும், சாதாரண சளி நுண்ணுயிர்க் கொல்லிகளுக்குக் கட்டுப்படாத வைரஸ்களால் ஏற்படுகிறது.
இந்த சளியை முற்றிலும் நீக்க உதவும் வீட்டு வைத்தியங்களே சிறந்தது என்று சொல்லப்படுகின்றது. தற்போது அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

  • சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு சேர்த்து நன்கு பொடி செய்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து 1/8 லிட்டராகச் காய்ச்சி காலை, மாலை என இரண்டு வேளை குடித்து வந்தால் சளி, காய்ச்சல் குறையும்.
  • நன்கு சுத்தம் செய்த கொள்ளை நீர் விட்டு சுத்தம் செய்து வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை வடிக்கட்டி அதன் நீர் எடுத்து ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.
  • வெள்ளை சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பியை காலையில் குடித்து வந்தால் சளி நீங்கும்.
  • தூய யூகலிப்டஸ் எண்ணெயை தொண்டை மற்றும் மார்பில் நன்கு தடவி வந்தால் சளி, இருமல், நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் குறையும்.
  • மாதுளம் பழத்தை நன்கு கழுவி அதை தினமும் சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.
  • துளசி, கற்பூரவல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து வேக வைத்து அதன் சாற்றைப் பிழிந்து ஒரு வேளைக்கு 10 மி.லி வீதம் 3 நாட்கள் பருகி வந்தால் சளி குறையும்.
  • 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்து, அதை தினமும் 3-4 முறை குடித்து வர, சளி தொண்டையில் தேங்குவது குறையும்.
  • 1 டம்ளர் நீரில் இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் தேன் கலந்து குடித்து வர சளி விரைவில் வெளியேறும்.
  • 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் நீரில் கலந்து, அதை தினமும் குடித்து வர அதிகப்படியான சளி உற்பத்தி தடுக்கப்படும்.
  • ஒரு பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி, அதில் மூலிகை இலைகளை போட்டு, அந்நீரால் தினமும் 3-4 முறை ஆவி பிடித்து வர, சளி விரைவில் வெளியேறிவிடும்.
  • எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதை தினமும் மூன்று வேளைகள் குடித்து வர, சளி மற்றும் கபம் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.
உடலில் இருக்கும் சளியை விரைவில் போக்க வேண்டுமா? Reviewed by Author on March 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.