அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வரம் வளைவு உடைத்தவர்களுக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டுள்ளது -

பங்குதந்தை உட்பட பதினொரு பேர் இன்றைய தினம் மன்னார் பொலிஸ்நிலையத்திற்கு சென்றனர் 
இவர்களுக்கு ஆதரவாக   வடமாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் முன்னால் வடமாகாண சபை உறுப்பினர் சிராய்வா உட்பட கத்தோலிக்க மத இளம் சட்டத்தரணிகள் வளைவை உடைத்தவர்களுக்கு ஆதரவாக பிரசன்னமாகி இருந்தனர்.

இதேவேளை வவுனியா சிரேஷ்ட சட்டத்தரனி இன்றைய தினம் வவுனியா பதில்நீதவானாக இருக்கும்அன்ரன்புனிதநாயகம் அவர்களுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது 

மாக்கஸ் பங்குதந்தை சொந்த பினையிலும் ஏனைய பத்துப்பேர் ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணையிலும் மன்னார் பதில் நீதவான் கயஸ் பெல்டானோ விடுதலை செய்தார்

இன்றைய வழக்கு தொடர்பாகபாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளர்களான எமக்கு எவ்வித அறிவித்தல்களும் கொடுக்காமல் ஒரு தலைப்பட்சமாக பொலிசார் செயற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள்

இந்த சம்பவம் இன்று(24)ஞாயிற்றுக்கிழமை நண்பகல் பன்னிரெண்டு மணியளவில் நடைபெற்றது 

இதன் வழக்கு எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


கடந்த சிவராத்திரி தினத்திற்கு முதல் நாள் திருக்கேதீஸ்வரத்தின் அலங்கார வளைவு கத்தோலிக்க மக்களால் பிடுங்கி எறியப்பட்டது இந்த செயலில் பங்கு  தந்தை ஒருவரும் உடனிருந்தார் 

இது சம்பந்தமான வழக்கு கடந்த எட்டாம் திகதி  மன்னார் நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது திருக்கேதீஸ்வரம் அலங்கார வளைவு உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பாதிக்கப்பட்டவர்களிடம் உள்ள புகைப்பட வீடியோ ஆதாரங்களை வைத்து உடனடியாக கைது செய்யுமாறு மன்னார் பொலிசாருக்கு மன்னார் நீதவான் ரி.சரவணராஜா உத்தரவு பிறப்பித்திருந்தார்

ஆனால் நீண்டநாட்களாக  எவரும் கைது செய்யப்படவில்லை நாடளாவிய ரீதியில் பல அமைப்புகள் கண்டண அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தது 
இதன் வழக்கு தவனை எதிர்வரும் 29ம் திகதி மன்னார் நீதி மன்றத்தில் நடைபெற இருக்கும் இந்த நிலையில் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில்  பங்குத்தந்தை மார்க்கஸ் உட்பட பதினோரு  நபர்களை  மன்னார் பதில் நீதவான் கயஸ்பல்டானோ அவர்களிடம் முன்னிலைப்படுத்தி உடனடியாக பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் 


இதன்படி மாக்கஸ் பங்குத்தந்தைக்கு சொந்தப்பினையிலும்  ஏனைய பத்து பேருக்கும் ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்வதற்கு  பதில் நீதிவான் அனுமதியளித்துள்ளார்

பொலிஸாரும்  சட்டத்துறையினரும் வன்முறையார்களுக்கு  சார்பாக செயற்படுவதாக இந்து சமய அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றார்கள்







திருக்கேதீஸ்வரம் வளைவு உடைத்தவர்களுக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டுள்ளது - Reviewed by NEWMANNAR on March 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.