அண்மைய செய்திகள்

recent
-

2019 நாடாளுமன்ற தேர்தல், 2019 லோக் சபா தேர்தல், லோக் சபா நாம் தமிழர்,நாம் தமிழர் தேர்தல் கூட்டணி,நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை"


2019 நாடாளுமன்ற தேர்தல், 2019 லோக் சபா தேர்தல், லோக் சபா  நாம் தமிழர்,  நாம் தமிழர்  தேர்தல் கூட்டணி, நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை "
  "articleBody": "சென்னை மாநில உரிமைகளை மையப்படுத்தி வெளியிடப்பட்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரிய வரவேற்பை பெற்று உள்ளது.லோக்சபா தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆட்சி செயற்பாட்டு வரைவு எனும் பெயரில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். மாநில உரிமை, மொழி உரிமை என்று பல்வேறு திட்டங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.முக்கியமாக தமிழக நலனுக்காக நிறைய அறிவிப்புகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா.. எப்படிடா எங்க கிட்ட ஓட்டு கேட்டு வர்றீங்க?.. சீமான் சாடல் அந்த அறிக்கையில் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களை மையமாக வைத்து மேலும் கூடுதலாக வர்த்தகப் போக்கு வரவு, சுற்றுலாப் படகு, கப்பல் போக்குவரத்து, கேளிக்கை, மீன்பிடி அம்சங்கள் உள்ளிட்ட வளர்ச்சிகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். துறைமுகப் பகுதிகளில் கழிவுகள் தேங்காமல் சிப்பிகள், மீன்கள் இயற்கையாக வளர்வதற்கான வழிகளைச் செய்ய வேண்டும். அந்தப் பகுதிகள் முழுவதும் காற்று மாசுபடாத நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

   தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைமுகங்களுக்கும் சரக்குப் பெட்டகங்களை எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் சாலைப் போக்குவரத்து நவீன வசதிகளுடன் மாற்றப்படும். சாலைப் போக்குவரத்து, இரயில் போக்குவரத்து அனைத்தும் எளிதில் துறைமுகங்களோடு இணைக்கும்படியான கட்டமைப்புகள் நவீன முறையில் மேலும் வலுப்படுத்தப்படும்.

   உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சட்டமன்ற நாடாளுமன்றத் தொகுதிகளில் அப்படி வழங்கப்படவில்லை. தேர்தலில் ஒரு அரசியல் கட்சி பெண் வேட்பாளரை நிறுத்தினால் மற்ற கட்சிகளும் பெண் வேட்பாளரை நிறுத்துவதில்லை. மூன்று ஆண் வேட்பாளர்கள் நடுவில் ஒரு பெண் வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெறுவது கடினமாகி விடுகிறது.
   இது பெண்களுக்கான உரிமையாக இல்லை. அதனால் பெண்களுக்கு சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் தனித்தொகுதி அதாவது ஆதித் தமிழ்க் குடிகளுக்கு இருப்பதைப் போன்று தனித்தொகுதி போராடிப் பெறப்படும். இதனால் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கான பிரதிநிதித்துவம் கூடும்.

இப்போது 120 கோடி மக்கள் தொகை இருக்கும் போதும் அதே 543 பாராளுமன்றத் தொகுதியாக இருப்பதை ஏற்க முடியாது. அதில் சரியான பிரதிநிதித்துவம் இருக்காது. அதனால் 6 சட்டமன்றத்திற்கு ஒரு  பாராளுமன்றத் தொகுதி என்பதை மாற்றி 3 சட்டமன்றத்திற்கு ஒரு பாராளுமன்றத் தொகுதி கேட்டு, மாற்றம் கொண்டு வரப் போராடுவோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி குடியரசுத் தலைவரே நாட்டின் தலைவராக இருக்கிறார். மக்களாட்சித் தத்துவத்தின்படி அரசு அமைக்கப்படுவதாகக் கூறப்படும் சனநாயக நாட்டில், மக்களால் நேரடியாக தங்களது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாது.

மக்களே தங்கள் நாட்டின் குடியரசுத் தலைவரைத் தேர்தல் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் அரசியலமைப்பு மாற்றம் செய்ய நாம் தமிழர் அரசு பாடுபடும். மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத மாநிலங்களவை உறுப்பினர்கள், இந்நாட்டையே ஆளுகின்ற மத்திய மந்திரிகளாக வருவது மக்களாட்சி மாண்பிற்கு எதிரானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத எவரும் மக்களை ஆட்சி செய்கிற, அதிகாரம் செலுத்துகிற பொறுப்புகளில் வர உரிமையில்லை. அதனால் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு  அதிகாரம் அளிக்கப்படுவதை நாம் தமிழர் அரசு எதிர்க்கிறது.



2019 நாடாளுமன்ற தேர்தல், 2019 லோக் சபா தேர்தல், லோக் சபா நாம் தமிழர்,நாம் தமிழர் தேர்தல் கூட்டணி,நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை" Reviewed by Author on April 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.