அண்மைய செய்திகள்

recent
-

இயேசுவின் திருப்பாடுகளின் காட்சியானது ஆன்மீக வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல நாம் வழி சமைக்க வேண்டும்-ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ

மன்னார் மறைமாவட்டத்தில் பல பங்கு கலைஞர்கள் ஒன்றினைந்து காண்பிக்கும் 'அன்பின் காவியம்' என்ற இயேசுவின் திருப்பாடுகள் காட்சிகள் எம்மை ஆன்மீக வளர்ச்சியில் இட்டுச் செல்ல வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

கத்தோலிக்க மக்களின் தவக்காலத்தை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டத்தின் சமூகத் தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்குனர் அருட்பணி லக்ஸ்மன் டீ சில்வா அடிகளாரின் தலைமையில் மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளின் கலைஞர்களை ஒன்றுத் திரட்டி கலையருவி 'அன்பின் காவியம்' என்ற இயேசுவின் திருபாடுகளின் காட்சிகள் 07-08.04.2019 அதாவது ஞாயிறு, திங்கள் ஆகிய இருதினங்கள் மன்னார்  மறைமாவட்டத்தின் சமூகத் தொடர்பு அருட்பணி மையத்தில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இங்கு கலந்து கொண்ட பல நூற்றுக் கணக்கான மக்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றுகையில் நாங்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியோடு தவக்கால நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதில் நாம் அனைவரும்  இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

மன்னார் மறைமாவட்டத்தின் சமூகத் தொடர்பு அருட்பணி மையத்தில் இதற்கு பொறுப்பான அருட்பணி லக்ஸ்மன் டீ சில்வா அடிகளார் மன்னார் மறைமாவட்டத்தை ஒன்றினைந்து முதல் முறையாக திருப்பாடுகளின் ஆற்றுகையை செயல்படுத்தியிருப்பது மகிழ்ச்சிக்குரியது ஒன்றாகும்.

இன்று எவ்வளவோ சவால்கள் இருக்கத்தக்க இந்த கலையருவி நிலையத்தை உருவாக்கி இந்த திறந்த அரங்கிலே எமக்கு இயேசுவின் பாடுகளைப்பற்றிய 'அன்பின் காவியம்' என்ற ஆற்றுகையை வெளிப்படுத்துவதற்காக நாம் இறைவனுக்கும் இதன் பொறுப்பான அருட்பணி லக்ஸ்மன் டீ சில்வா அடிகளாருக்கும் நன்றி கூற வேண்டும்.

மன்னார் மறைமாவட்டத்திலே நமக்குத் தெரியும் பல இடங்களில் கலைஞர்கள் உருவாகி இருக்கின்றார்கள். இவர்களின் திறமைகளினால் எமது மறைமாவட்ட ஆன்மீக வளர்ச்சிக்கு இவர்களின் பங்களிப்பை எமக்கு கொடுத்திருக்கின்றார்கள்.

பல பங்குகளில் இருக்கின்ற நல்ல கலைஞர்களை ஒன்றுசேர்த்து இவ் ஆற்றுகையை மேற்கொண்டுள்ளதால் சிறப்பான இவ் நிகழ்வான 'அன்பின் காவியத்தை' நாம் கண்டு களிக்கின்றோம்.

இதேவேளையில் இயேசுவின் பாடுகள் எம்மை ஆன்மீக ரீதியில் தியானிக்க நாம் வழிசமைக்க வேண்டும். நாம் அடுத்த வாரம் புனித வாரத்தை தொடங்க
இருக்கின்றோம்.

ஆகவே இந்த தவக்கால காலத்தில் எமது பெரும் முயற்சிகளோடு பெரும்
பயிற்சிகளோடு ஒரு அன்போடு இந்த 'அன்பின் காவியம்' எமக்கு தரப்படுகின்றது. ஆகவே இதை நாம் எமது தியாக மனதுடன் இறைவனுக்கு எமது நன்றியையும் மகிமையையும் விடுக்கும் விதமாக இந்த ஆற்றுகையில் நாம் பங்கு கொள்வோம்.

























இயேசுவின் திருப்பாடுகளின் காட்சியானது ஆன்மீக வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல நாம் வழி சமைக்க வேண்டும்-ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ Reviewed by Author on April 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.