அண்மைய செய்திகள்

recent
-

தேனீக்களுக்காக பவேரியாவில் ஒரு புதிய சட்டம்!


விவசாய முறைகளில் பெரும் மாற்றங்களை முன்வைக்கும் ’தேனீக்களைக் காப்போம்’ என்னும் மனுவை பவேரியா சட்டமாக்க உள்ளது.
Bee Movie என்ற திரைப்படத்தை நம்மில் பலர் பார்த்திருக்கலாம்.
தேனீக்கள் மகரந்தச் சேர்க்கை செய்யாவிட்டால் தாவரங்களே அழிந்து போய்விடும், யாருக்குமே உணவு கிடைக்காது என்பதை சுவையாக சொல்லியிருக்கும் அந்த அனிமேட்டட் திரைப்படம்.
இதற்கிடையில் இன்னொருபக்கம், தேனீக்களில் பாதி விரைவாக அழிந்து வருவதாக அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

பிப்ரவரி மாதத்தில் தாவரங்களையும் விலங்கினங்களையும் பாதுகாப்பதற்காக முன்வைக்கப்பட்ட மனு ஒன்று 1.75 மில்லியன் கையெழுத்துக்களுடன் பெரும் வெற்றியை சந்தித்தது.
20 சதவிகித விவசாய நிலத்தில் இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துதல், 2030க்குள் அதை 30 சதவிகிதமாக மாற்றுதல் ஆகியவற்றை அந்த மனு முன்வைத்தது.

அந்த மனுவுக்கு மக்கள் அளித்த ஆதரவைக் கண்ட The Greens கட்சி இது உங்கள் வெற்றி என்று ட்வீட்டி, மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.
தேனீக்களைக் காக்கும் நடவடிக்கைக்காக பவேரியாவின் பத்து சதவிகித புல்வெளிகள் பூந்தோட்டங்களாக மாற்றப்பட வேண்டும், ஆறுகளும் நீரோடைகளும் பூச்சி மருந்துகள் மற்றும் உரங்களிடமிருந்து காக்கப்பட வேண்டும்.
தேனீக்களை காப்பது தொடர்பான இந்த மனுவை வெகுவாக ஆதரித்துள்ள அரசு, அதை வாக்கெடுப்புக்கு விடாமலே நேரடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்கப்போவதாக பவேரிய பிரீமியர் Markus Söder அறிவித்துள்ளார்.

தேனீக்களுக்காக பவேரியாவில் ஒரு புதிய சட்டம்! Reviewed by Author on April 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.