அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரில் கறுப்பு கொடிகட்டி துக்கம் அணுஷ்டிக்க பொலிஸார் தடை.. நகரபிதாவின் முயற்சியால் தடை தளர்த்தப்பட்டது!



மன்னாரில் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்கள்ää கடைகளை மூடி கறுப்பு கொடிகளை பறக்க விட்டனர்.
இதன்போது மன்னார் நகரிற்கு வந்த பொலிஸார் கடைகளை மூடுவதை தாம் தடுக்கவில்லை என்றும் ஆனால் கறுப்புக் கொடிகளை பறக்கவிடாது அவற்றை அப்புறப்படுத்துமாறும் வர்த்தகர்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆயினும் அதற்கு மறுப்பு தெரிவித்த வர்த்தகர்ளுக்கும்.
பொலிஸாருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் நகர சபையின் தலைவர் அன்ரனி டேவிசன் பொலிஸாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் கொடிகளை
தொடர்ந்தும் பறக்க விடுவதற்கான ஏற்பாடுகளையம் மேற்கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மன்னார் நகர சபையின் தலைவர் அன்ரனி டேவிசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்… கிறிஸ்துவின் உயிர்ப்பு விழா திருப்பலியின் பொது இடம்பெற்றிருக்கம் இந்த
குண்டுத்தாக்குதல் என்பது ஏற்றுக்கொள்ளக்குடியது அல்ல. இத்தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்கள் கொள்ளப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தச் செயலைச்செய்த தீவிரவாத அமைப்புக்கள்யாராக இருந்தாலும் அந்த அமைப்பினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இத்தகைய தீவிரவாத அமைப்புகளுக்கு நாட்டிலே தடை ஏற்படுத்தி எதிர்காலத்தில் சட்ட நடிவடிக்கை எடு;க வெண்டும் என கோருகினள்றோம்.
இந்த தாக்குதலிலே உயிரிழந்தவர்களை நிணைத்த கவலை படும் நாபம் அவர்களின் உறவினாகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாப்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த தாக்குதலி காயமடைந்தவர்கள் மீண்டும் தமது தேகஆரோக்கியத்துடன் வீடு திரும்புவதற்காக நாம் இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.
இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து இன்று மன்னார் நகரில் கறுப்புக் கொடிகளைக்கட்டி எமது எதிர்ப்பையும் துக்கத்தையும் வெளிப்படுத்துகின்றோம்.

மன்னார் நகரில் வர்த்தகர்ளால் கட்டப்பட்ட கறுப்புக்கொடிகளை அகற்றும்
நடிவடி;ககைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்த நிலையில் அதனை தடுத்து நிறுத்தும் நடிவடிக்கையினையும் நாம் மேற்கொண்டுள்ளளோம்.
கறுப்புக்கொடி கட்டுவது என்பது துக்கத்தின் ஒரு வெளி அடையாளம் என்பதை பொலிஸார் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் கறுப்புக்கொடியை அகற்றுமாறு பொலிஸார் கூறுவது
இந்நாட்டில் துக்கம் இல்லை என்பதை எடுத்துக்காட்டும் ஒரு நடவடிக்கையாகவே எங்களுக்கு விளங்குகின்றது.



மன்னார் நகரில் கறுப்பு கொடிகட்டி துக்கம் அணுஷ்டிக்க பொலிஸார் தடை.. நகரபிதாவின் முயற்சியால் தடை தளர்த்தப்பட்டது! Reviewed by Author on April 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.