அண்மைய செய்திகள்

recent
-

தீக்கிரையான தேவாலயத்தை சீரமைக்க நிதியுதவி வழங்கிய சிறுமி -


பிரித்தானிய சிறுமி தன்னுடைய சேமிப்பில் இருந்து 3 டொலரை பாரீஸ் நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க நன்கொடையாக வழங்கி உள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே-டேம் தேவாலயம்,
கடந்த 15 ஆம் திகதி பயங்கர தீ விபத்தில் சிக்கியது. தீயின் கோரப்பிடியில் சிக்கி, நோட்ரே-டேம் தேவாலயத்தின் பெரும் பகுதி உருக்குலைந்து போய்விட்டது.
பிரான்சின் வரலாற்று சின்னமாக பார்க்கப்படும் இந்த தேவாலயம், ஏற்கனவே இருந்ததை விட அதிக அழகுடன் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி மெக்ரான் உறுதி அளித்துள்ளார்.

மட்டுமின்றி அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இது சாத்தியமாகும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ள அவர்,
தேவாலயத்தின் புனரமைப்பு பணிகளுக்காக சர்வதேச அளவில் நிதி திரட்டி வருகிறார். உலகம் முழுவதிலும் இருந்து நிதி குவிந்து வருகிறது.
இந்த நிலையில், பிரித்தானியாவை சேர்ந்த கெயித்லின் என்ற 9 வயது சிறுமி தன்னுடைய சேமிப்பில் இருந்து 3 டொலரை பாரீஸ் நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க நன்கொடையாக வழங்கி உள்ளார்.
பாரீசில் உள்ள நிதி திரட்டும் அமைப்புக்கு 3 டொலரையும், ஒரு கடிதம் ஒன்றையும் தபால் மூலம் அவள் அனுப்பியுள்ளாள்.

அதில், நோட்ரே-டேம் தேவாலயத்தின் தீ விபத்து குறித்து, ரேடியோ மூலம் அறிந்து மனமுடைந்து போனேன்.
என்னால் முடிந்த உதவியை செய்ய விரும்பினேன். எனக்கு தெரியும் இது பெரிய தொகை இல்லை.
ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு சின்ன தொகையும் தேவாலயத்தை சீக்கிரமாக சீரமைக்க உதவும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தீக்கிரையான தேவாலயத்தை சீரமைக்க நிதியுதவி வழங்கிய சிறுமி - Reviewed by Author on April 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.