அண்மைய செய்திகள்

recent
-

இந்த ஒரு செடியில் இவ்வளவு மருத்துவ குணங்களா?


பூக்கும் தாவர இன வகைகளில் ஒன்று தான் ஊமத்தை. இதனை ஊமத்தை, உன்மத்தம் என்றும் அழைப்பர். ஊமத்தம் பூ புனல் வடிவில் காணப்படுகிறது.
இம்மலர்கள் வெள்ளை, மஞ்சள் மற்றும் கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன.

இதில் வெள்ளை ஊமத்தை, பொன் ஊமத்தை, கரு ஊமத்தை ஆகிய வகைகளும் காணப்படுகின்றன.
இது விஷத்தை முறிக்கும் தன்மையுள்ள ஒரு அரிய மருந்து செடியாக கருதப்படுகின்றது.
அதுமட்டுமின்றி , ஊமத்தையின் வேர், இலை மலர்கள், விதை உள்ளிட்ட முழு செடியும் நன்மைகள் தரும் வகையில், இதில் ஏராளமான மருத்துவகுணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.
தற்போது இந்த செடியில் அடங்கியுள்ள மருத்துவகுணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

  • உடலில் வரும் கைகால் மூட்டு வலிகள், மூட்டு வீக்கம், உடல் கட்டிகள் மற்றும் வீக்கம் இவற்றை குணமாக்க, ஊமத்தை இலைகளை அடுப்பில் இட்டு, விளக்கெண்ணை அல்லது நல்லெண்ணையை சற்றே தடவி, வதக்கி, வலியால் அவதிப்படும் பாகங்களில் கட்டிவர, விரைவில் குணமாகும்.
  • ஊமத்தை இலைப் பொடியை சிறிது தேனில் கலந்து பருகிவர, மூச்சு விடுதலில் உள்ள சிரமங்கள் குறையும்.
  • குழந்தைகளுக்கு கோடைக் காலங்களில் உடலில் அக்கி குணமாக்க, ஊமத்தை இலைகளை சிறிது வெண்ணை கலந்து அரைத்து, அந்தக் கட்டிகளின் மீது தடவி வர, அவை யாவும் விரைவில் சரியாகி, மறைந்து விடும்.
  • ஊமத்தை இலைகளை வெறுமனே அரைத்து, ஒரு சட்டியில் சிறிது நல்லெண்ணை இட்டு, அதில் வதக்கி நாய் கடித்த காயத்தில் கட்டி வர, காயங்கள் ஆறி விடும்.
  • ஊமத்தை இலைச் சாறு இரண்டு துளிகள் எடுத்து அதை, பனை வெல்லத்துடன் கலந்து தினமும் இரு வேளை, மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, நாய்க் கடி நஞ்சு நீங்கி விடும்.
  • ஊமத்தை இலைப் பொடியை நல்லெண்ணையில் இட்டு காய்ச்சி, குளிக்கு முன், தலையில் நன்கு அழுத்தி தேய்த்து சற்றுநேரம் ஊற வைத்து, அதன் பின் குளித்து வர, தலையில் இருந்து அரிப்பு, சொறியை கொடுத்து வந்த பேன் ஈறு மற்றும் பொடுகு தொல்லை தீரும்.
  • ஊமத்தம் பிஞ்சை நம் உமிழ் நீரினைக் கலந்து அரைத்து, முடி கொட்டிய பாகங்களில் தினமும் தடவி வர, தலையில் ஏற்படும் புழு வெட்டு அல்லது பூச்சிக் கடி பாதிப்புகள் யாவும் அடியோடு நீங்கி, அவ்விடங்களில் முடிகள் நன்கு வளர, ஆரம்பிக்கும்.
  • ஊமத்தங்காயை அனலில் இட்டு வாட்டி, அதை அரைத்து, புண்கள் மற்றும் காயங்களில் தடவி வர, உடலில் நீண்ட நாட்களாக ஆறாமல் வேதனை அளித்து வரும் புண்களை, காயங்களை விரைவில் ஆற்றி விடும்.
  • மூல வியாதி குணமடைய, ஊமத்தை விதைகளை பொடியாக்கி, நெய்யில் நன்கு கலந்து, மூலத்தின் நுனியில் தடவிவர, மூல வியாதிகள் குணமாகும்.
  • ஊமத்தை விதைகளை நல்லெண்ணையில் இட்டு வெயிலில் சில நாட்கள் வைத்திருந்து அதை வயிற்றில் தடவி வர, உடல் சூட்டினால் உண்டான வலி, சிறுநீர்த் தாரை எரிச்சல் போன்றவை குணமாகும்.
  • ஊமத்தை விதையுடன் சாமந்திப் பூவை சேர்த்து அரைத்து, உடலில் ஒவ்வாமையால் ஏற்பட்ட தடிப்பு, சொறி சிரங்கு போன்ற சரும வியாதிகளின் மீது தடவி வர, அவை விரைவில் குணமாகி விடும்.
  • உடலில் காய்ச்சல், வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் வியாதி பாதிப்புகளை அகற்றி, காய்ச்சல், வயிற்றுப் போக்கை சரி செய்கிறது.
  • உடலில் சருமத்தில் தோன்றும் பாதிப்புகளை நீக்கி, சருமத்தை காக்கிறது. மனநிலை பாதிப்படைந்தோரை சரியாக்குகிறது.
  • சிறிது, ஊமத்தை மலர்களை இரவில், ஒரு அண்டா அல்லது குளிக்கும் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் இட்டு வைத்து, காலையில் தலையில் இந்த மலர்களை நன்கு தேய்த்து, குளிக்கச் செய்ய வேண்டும். இது போல, தொடர்ந்து ஒரு வாரம் குளித்து வரச் செய்ய, மன நிலையைப் பாதித்தவர்கள் சுலபமாகத் திரும்புவர்.
இந்த ஒரு செடியில் இவ்வளவு மருத்துவ குணங்களா? Reviewed by Author on April 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.