அண்மைய செய்திகள்

recent
-

வெறும் 10 லட்சத்தில் தயாரான படம்! அதிர்ச்சியில் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்கள் -


சினிமா டிஜிட்டல் மயமான பிறகு பல புதிய மாற்றங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக குறைந்த பட்ஜெட்டிலும் படங்கள் தயாராகிறது. முதன் முறையாக 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் ழகரம் என்ற படம் தயாராகி உள்ளது. இதில் நந்தா ஹீரோவாக நடித்துள்ளார். நாகர்கோவிலை சேர்ந்த கிரிஷ் என்பவர் இயக்கி உள்ளார். இவர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை இயக்கியவர்.
கவாகேன்ஸ் என்ற பெண் எழுத்தாளர் எழுதிய மர்ம நாவல்தான் ழகரம் திரைப்படமாகியுள்ளது. ஜோ, பரத்வாஜ், பிரின்ஸ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர், தரன் இசை அமைத்துள்ளார். நந்தாவுடன் ஈடன், விஷ்ணுபரத், சந்திரமோகன், மனோஜ் கிருஷ்ணா நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் க்ரிஷ் கூறியதாவது:

ஒரு புதையலைத் தேடி நான்கு பேர் செல்லும் பயணமே கதை. சென்னை, விசாகப்பட்டினம், காஞ்சிபுரம், தஞ்சாவூர் ,கோயம்புத்தூர் என்று பயணிக்கிறது கதை. இன்று 10 லட்ச ரூபாயில் ஒரு படம் எடுப்பது பெரிய சவாலான விஷயம் இதை சாத்தியப்படுத்தியது நந்தாவின் ஆதரவு தான். படத்தில் பெரிய முதலீடு அவர் தான். அவர் கொடுத்த ஊக்கம் சாதாரணமானதல்ல. இதில் வழக்கமான வேடத்தில் அவரைப் பார்க்க முடியாது. முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து உள்ளார்.

திட்டமிட்டு படம் எடுத்தால் செலவைக் குறைக்க முடியும் புதியவர் கூட ஒரு படத்தை எடுக்க முடியும் என்று நிரூபிக்க இந்த படத்தை எடுத்தோம். நண்பர்கள் பலர் உதவியுடன் படம் முடிந்துவிட்டது. திட்டமிட்டுச் சிக்கனமாகப் படம் எடுத்திருந்தாலும் விறுவிறுப்பான கதை சொல்வதில் எந்தக் குறையும் வைக்கவில்லை என்பதை படம் பார்க்கும்போது அனைவரும் உணர்வார்கள் என்கிறார் இயக்குநர் க்ரிஷ். இந்தப் படம் நாளை(ஏப்.,11) வெளிவருகிறது.
வெறும் 10 லட்சத்தில் தயாரான படம்! அதிர்ச்சியில் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்கள் - Reviewed by Author on April 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.