அண்மைய செய்திகள்

recent
-

உள்ளாடைகளை தங்கள் நிலத்தில் புதைக்கும் பிரான்ஸ் விவசாயிகள்:


பிரான்சின் வட கிழக்கு பகுதி விவசாயிகள் தங்கள் சொந்த விவசாய நிலத்தில் தங்கள் உள்ளாடைகளை புதைக்கிறார்கள்.
எதற்காக அப்படி செய்கிறார்கள், ஏதாவது மூட நம்பிக்கை காரணமா? கேட்பதற்கு வேண்டுமானால் இது வேடிக்கையாக இருக்கலாம்.
ஆனால் French Chamber of Agriculture என்னும் விவசாயிகள் அமைப்பு, அப்படி செய்யும்படி விவசாயிகளுக்கு சவால் விடுத்துள்ளது.
அப்படி செய்வதன் நோக்கம், தங்கள் பண்ணைகளில் உள்ள மண்ணின் தரத்தை சோதிப்பதற்காக ஆகும்.

’உங்கள் உள்ளாடைகளை புதையுங்கள்’ என்றே அழைக்கப்படும் இந்த சவாலின்படி, விவசாயிகள் தங்கள் பருத்தி உள்ளாடைகளை மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் தங்கள் வயல்களில் புதைக்க வேண்டும்.
பின்னர் ஆகஸ்டு மாதம் 19ஆம் திகதிக்கும் 25ஆம் திகதிக்கும் இடையில் விவசாயிகள் அந்த உள்ளாடைகளை தோண்டி எடுக்க வேண்டும்.
அவை எந்த அளவுக்கு மக்கிப்போயுள்ளன என்பதை பரிசோதிக்க வேண்டும். அவை எந்த அளவுக்கு மக்கிப்போயுள்ளனவோ அந்த அளவுக்கு அந்த மண்ணில் புழுக்கள், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியங்கள் உள்ளன, அதாவது அந்த அளவுக்கு அந்த மண் செழிப்பாக உள்ளது என்று பொருள்.
உண்மையில், விவசாயிகள் தங்கள் உள்ளாடைகளை புதைப்பது இது முதல் முறையல்ல, 2018ஆம் ஆண்டு Var பகுதியில் 210 உள்ளாடைகள் நிலத்தில் புதைக்கப்பட்டன.

அதிக அளவில் பூச்சி மருந்துகளும் நிலத்தை உழுவதும் எந்த அளவுக்கு மண்ணை நாசம் செய்கின்றது என்பதைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2017ஆம் ஆண்டு கனடா மண் பாதுகாப்பு கவுன்சில் ’உங்கள் உள்ளாடைகளை புதையுங்கள்’ என்னும் பிரச்சாரத்தை தொடங்கியதிலிருந்துதான் இந்த ஐடியா பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உள்ளாடைகளை தங்கள் நிலத்தில் புதைக்கும் பிரான்ஸ் விவசாயிகள்: Reviewed by Author on May 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.