அண்மைய செய்திகள்

recent
-

தமிழக மக்களவை தேர்தல் முடிவுகள்... வெற்றியாளர்களின் முழுப்பட்டியல் -


இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியிருக்கின்றன.

தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி ஏழு தொகுதிகளுக்கு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஐந்தில் திமுகவும், காங்கிரஸ் ஒரு தொகுதி மற்றும் கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும் வென்றுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 38 மக்களவை தொகுதிகளில் அதிமுக இரண்டு தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணி 7-ல் வெற்றியும் 29-ல் முன்னிலையிலும் உள்ளது.
சிதம்பரம் தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை நிலவரம் மாறிக்கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.
எந்தெந்த தொகுதிகளில் யார் வெற்றி/ முன்னிலை என்ற விவரங்கள் இங்கே.
  • அரக்கோணம் - எஸ்.ஜெகத் ரட்சகன் (திமுக)
  • ஆரணி - எம் கே விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்)
  • மத்திய சென்னை - தயாநிதி மாறன் (திமுக)
  • வட சென்னை - கலாநிதி வீராசாமி (திமுக)
  • தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)
  • சிதம்பரம் - சந்திரசேகர் (அதிமுக)
  • கோயம்புத்தூர் - பி.ஆர். நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
  • கடலூர் - டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் (திமுக)
  • தருமபுரி - செந்தில் குமார் (திமுக)
  • திண்டுக்கல் - வேலுசாமி (திமுக)
  • ஈரோடு - அ.கணேசமூர்த்தி (மதிமுக - திமுக சின்னம் )
  • கள்ளக்குறிச்சி - கவுதம் சிகாமணி (திமுக)
  • காஞ்சிபுரம் - ஜி.செல்வம் (திமுக)
  • கன்னியாகுமரி - ஹெச். வசந்த குமார் (காங்கிரஸ்)
  • கரூர் - ஜோதிமணி (காங்கிரஸ்)
  • கிருஷ்ணகிரி - டாக்டர் ஏ. செல்லகுமார் (காங்கிரஸ்)
  • மதுரை - சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
  • மயிலாடுதுறை - எஸ். ராமலிங்கம் (திமுக)
  • நாகப்பட்டினம் - எம்.செலவராஜ் (இந்திய கம்யூனிஸ்ட்)
  • நாமக்கல் - ஏ.கே.பி. சின்ராசு (கொமுதேக - திமுக சின்னம் )
  • நீலகிரி - ஆ.ராசா (திமுக)
  • பெரம்பலூர் - டி.ஆர். பச்சமுத்து (ஐ.ஜே.கே - திமுக சின்னம் )
  • பொள்ளாச்சி - சண்முக சுந்தரம் (திமுக)
  • ராமநாதபுரம் - நாவாஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் )
  • சேலம் - எஸ்.ஆர். பார்த்திபன் (திமுக)
  • சிவகங்கை - கார்த்தி சிதம்பம் (காங்கிரஸ்)
  • ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு (திமுக)
  • தென்காசி - தனுஷ் எம்.குமார் (திமுக)
  • தஞ்சாவூர் - எஸ்.எஸ். பழனி மாணிக்கம் (திமுக)
  • தேனி - ரவீந்திர நாத் குமார் (அதிமுக)
  • திருவள்ளூர் - கே. ஜெயக்குமார் (காங்கிரஸ்)
  • தூத்துக்குடி - கனிமொழி (திமுக)
  • திருச்சி - திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)
  • திருநெல்வேலி - ஞானதிரவியம் (திமுக)
  • திருப்பூர் - சுப்பராயன் - (இந்திய கம்யூனிஸ்ட்)
  • திருவண்ணாமலை - அண்ணாதுரை சி.என் (திமுக)
  • விழுப்புரம் - டி.ரவிக்குமார் ( விசிக - திமுக சின்னம் )
  • விருதுநகர் - மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்)
- BBC - Tamil

தமிழக மக்களவை தேர்தல் முடிவுகள்... வெற்றியாளர்களின் முழுப்பட்டியல் - Reviewed by Author on May 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.