அண்மைய செய்திகள்

recent
-

கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்கு சமமானது கருக்கலைப்பு... தொடரும் போராட்டம் -


அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் சட்டம் அண்மையில் அமலுக்கு வந்ததை எதிர்த்து பெண் உரிமை ஆர்வலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டங்களை தொடர்ந்து வாஷிங்டன் நகரில் வாடிகன் சார்பில் கருக்கலைப்புக்கு எதிரான மாநாடு நடைபெற்றது.
இதில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கருக்கலைப்பு விவகாரம் ஒரு மதரீதியான பிரச்சினையல்ல, மாறாக மனிதாபிமான பிரச்சினை என்று தெரிவித்தார்.


தொடர்ந்து, பிரச்சினையை தீர்க்க மனித உயிரை பறிப்பது சட்டப்பூர்வமானதா? என்று கேள்வி எழுப்பிய அவர், கருவில் உள்ள குழந்தையை அழிப்பது கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்கு சமமான செயல் என்று வேதனை தெரிவித்தார்.
மேலும், கரு சரியாக வளரவில்லை என்பதால் கருக்கலைப்பு செய்வதை ஏற்கமுடியாத ஒன்று. அது மனிநேயமற்ற செயல். மிகவும் பலவீனமான முறையில் பிறந்தாலும் பரவாயில்லை, குழந்தைகளை நாம் வரவேற்போம் என்று தெரிவித்தார்.



கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்கு சமமானது கருக்கலைப்பு... தொடரும் போராட்டம் - Reviewed by Author on May 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.