அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி பாடசாலைகள் தீவிர பரிசோதனை

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் நாளை திங்கள் கிழமை மீண்டும் ஆரம்பமாகப் போகும் பாடசாலைகளை மன்னாரில் இன்று பாதுகாப்பு படையினர் தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்துகின்றனர்.

பாடசாலைகளின் இரண்டாம் தவணை மீண்டும் திங்கள் கிழமை (06.05.2019)
ஆரம்பமாவதை முன்னிட்டு மாணவர்களின் பாதுகாப்பு கருதி அதற்கு முதலே
பாடசாலைகள் கடும்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும்
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சம்பந்தமாக அதிபர்களுடன்
கலந்தாலோசிக்கும் நடவடிக்கைகளையும் மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர்கள் தலைமையில் நேற்று முன் தினம் வெள்ளிக் கிழமை 03-05-2019 கூட்டங்கள் இடம்பெற்றன.

கடந்த மாதம் 5ந் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும்
இரண்டாம் தவணை கடந்த 22ந் திகதி ஆரம்பிக்கப்பட இருந்தது.

ஆனால் கடந்து 21ந் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டில் எட்டு இடங்களில்
குண்டுத் தாக்குதல் இடம்பெற்றன.

இதனால் குறிப்பிட்ட தினத்தில் பாடசாலை மீண்டும் ஆரம்பிக்க முடியாத
நிலையில் தற்பொழுது திங்கள் கிழமை (06.05.2019) மீண்டும் பாடசாலைகள்
ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் மன்னார் மாவட்டத்திலுள்ள 140 பாடசாலைகளிலும் பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைககளை அவ் பிரதேச செயலாளர்கள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து பாடசாலை அதிபர்களுனடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த வாரம் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பாதகாப்பு சம்பந்தமான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய வெள்ளிக் கிழமை (04) மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச
செயலாளர்கள் பிரிவிலும் பிரதேச செயலாளர்கள் தலைமையில் அந்நதந்த பிரதேச செயலங்களில் மாணவர்கள் பாதகாப்பு விடயமாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இக் கூட்டத்தில் பாடசாலை அதிபர்கள், பாதுகாப்பு படையினர் ஆகியோர்
பங்கேற்றி இருந்தனர்.

திங்கள் கிழமை (நாளை 06.05.2019) பாடசாலை மீண்டும் ஆரம்பிப்பதால்
ஞாயிற்றுக் கிழமை (இன்று) பாடசாலை அதிபர்களுடன் பாடசாலையை தீவிர
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தீர்மானங்கள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாடசாலை நாட்களில் பாடசாலை வாயிலில் மாணவர்களின் புத்தகப்பைகள்
ஆசிரியர்களால் பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும்

பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தும் சின்னம் கொண்ட கழுத்துப்பட்டி
அணிந்திருக்க வேண்டும் எனவும்,
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின் பாடசாலை வாயில்கள் மூடப்படும் எனவும்,
பாடசாலைக்குள் அதிபர் ஆசிரியர் மாணவர் தவிர்ந்த பெற்றோரோ அல்லது வெளியாரோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் பாடசாலை முடிந்ததும் பாடசாலைகளில் பிரத்தியேக வகுப்புக்கள் விளையாட்டுக்கள், காலை ஒன்றுகூடல் போன்ற நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ள
வேண்டும் எனவும் பாடசாலைக்கு அருகாமையில் வாகனங்கள் நிறுத்தாது
பார்த்துக் கொள்ளும்படியும் போன்ற விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தேவையேற்படும்போது பொலிசாரின் உதவிகளையும் நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெற்றோர் தங்கள் பிள்ளளைகள் மட்டில் மிகவும் கவனம் செலுத்தும்படியும் தெரியாதவர்களிடம் பிள்ளைகள் பொருட்கள் ஒன்றையும் பெற்றுக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தும்படியும் கேட்கப்பட்டுள்ளனர்.

மடு பிரதேச செயலாளர் பிரிவில் மடு பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தலைமையில் பாடசாலை அதிபர்கள், பாதுகாப்பு படையினர் மாணவர்கள் பாதுகாப்பு கருதி வெள்ளிக்கிழமை நடாத்திய கூட்டம்--


மன்னாரில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி பாடசாலைகள் தீவிர பரிசோதனை Reviewed by Author on May 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.