அண்மைய செய்திகள்

recent
-

இரு தமிழர்களை அடக்க இங்கிலாந்திலிருந்து படையை அழைத்த வெள்ளையர்கள்...


இந்தியாவில் முதலில் சுதந்திர போராட்டத்தை துவங்கிய மருது சகோதரர்களை, அடக்க இயலாமல் வெள்ளைகாரர்கள் இங்கிலாந்திலிருந்து படைபலத்தை பெருக்கினார்கள் என்று ஒரு வரலாற்று செய்தி நிலவுகிறது.
இந்தியாவில், 1857 ஆம் ஆண்டில்தான் முதல் சுதந்திர போராட்டம் துவங்கியது என்று வரலாற்றில் தெரிவிக்கப்பட்டாலும், 1801ஆம் ஆண்டே இரு தமிழர்கள் தங்களின் முதல் ஆங்கிலேயர் எதிர்ப்பு முழக்கத்தை துவங்கிவிட்டனர்.

ஆம், 1748 ஆம் ஆண்டில் டிசம்பர் 15ஆம் திகதி உடையார்சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும், ஆனந்தாயி என்ற பொன்னாத்தாளுக்கும் மகனாக இன்றைய தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடியில் பெரிய மருது பிறந்தார். 5 ஆண்டுகள் கழித்து 1753-ல் சின்ன மருது பிறந்தார்.
1761 ஆம் ஆண்டில் முத்து வடுகநாதரும், வேலு நாச்சியாரும் சிவகங்கை அழைத்து வந்தனர். வேட்டையாட சென்ற மன்னருக்கு உதவி செய்ய சென்ற மருது சகோதரர்கள், வேங்கையை எதிர்கொண்டு வீழ்த்தியதாகவும் வரலாறு உண்டு.
மேலும், அரசி வேலுநாச்சியாருக்கு போர் பயிற்சி சின்னமருதால் வழங்கப்பட்டதாகவும் வரலாறு உண்டு.
இந்நிலையில், நாட்டை ஆளவந்த ஆங்கிலேயர்களின் தளபதி ஜோசப் சுமித் தஞ்சை மீது போர் தொடுத்தான். இதனால் பயந்துபோய், தஞ்சை மன்னன் ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான்.
இந்நிலையில், சிவகங்கையை கைப்பற்ற ஆகிலேயர்கள் சூழ்ச்சி செய்தனர். சிவகங்கையை ஆண்ட வேலுநாச்சியாரை காக்க மருது சகோதரர்கள் படை திரட்டினர்.

ஹைதர் அலி என்பவருடன் இணைந்து வேலுநாச்சியாரை காத்த அவர்கள். தலைமறைவாக வாழ்ந்து 1772 முதல் 1780 வரை ஆகிலேயருக்கு எதிராக படையை திரட்டினர்.
1780 ஆம் ஆண்டு சிவகங்கையை ஆக்கிலேயர்களிடம் இருந்து கை பற்றி வேலுநாச்சியாரை மறுபடியும் ஆட்சியில் அமர்த்தினர்.
வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்து கூறினார். மருது சகோதரர்களை அரச பிரதிநிதிகளாக வேலு நாச்சியார் அறிவித்தார்.

1799ஆம் ஆண்டு கயத்தாரில் அக்டோபர் 17ஆம் நாள் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலப்பட்டார். அதனை தொடர்ந்து, வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமத்துரைக்கு சின்ன மருது அடைக்கலம் கொடுத்தார். அதனால், 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் சிவகங்கை மீது தாக்குதல்களை தொடுத்தனர்.
முதலில் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி 3 மாவட்டங்களை மருது சகோதரர்கள் மீட்கின்றனர். மருது பாண்டியர்களுடைய போர் திறமையை அடக்குவதற்காக, ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திலிருந்து அதிகமான படை பலத்தைப் பெற்று வந்ததாக ஒரு வரலாற்றுசெய்தி உண்டு.
இந்நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக்கு தொடர்ந்து ஊறுவிளைவித்து வந்த மருது சகோதரர்கள் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் திகதி, தூக்கிலிடப்பட்டனர், மேலும் அவர்கள் விருப்பப்படி காளையார் கோவிலுக்கு எதிரில் அடக்கம் செய்யப்பட்டனர்.

குறிப்பாக 1857ஆம் ஆண்டைத்தான் வட இந்தியாவில், சிப்பாய் கலகம் நடந்ததையொட்டி, இந்திய முதல் சுதந்திரப் போர் என்பதாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு 56 ஆண்டுகளுக்கு முன்பே 1801 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 10ஆம் தேதி திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் நின்றுகொண்டு, ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் பிரகடனத்தை, மருது பாண்டியர்கள் அறிவித்தார்கள் என்ற செய்தி முக்கியமான ஒரு நிகழ்வு.
இருவரின் வீரமும் தியாகமும், இன்று இந்தியர்கள் சுவாசிக்கும் சுதந்திர காற்றுக்கு அடித்தளம் என்பது தமிழருக்கே பெருமை

இரு தமிழர்களை அடக்க இங்கிலாந்திலிருந்து படையை அழைத்த வெள்ளையர்கள்... Reviewed by Author on May 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.