அண்மைய செய்திகள்

recent
-

நிறத்தின் அடிப்படையில் இன வெறுப்புக்குள்ளாவதை தடுக்க மாணவர்கள் மேற்கொள்ளும் பரிதாப நடவடிக்கை: ஆய்வு!


பிரித்தானியாவில் வெள்ளையரல்லாத மாணவ மாணவியர் இன வெறுப்பு தாக்குதல்கள் மற்றும் வம்புக்கிழுத்தல்களை தவிர்ப்பதற்காக தங்களை வெள்ளையாக காட்டிக்கொள்ளும் பரிதாப முயற்சியில் இறங்கியுள்ளதாக தொண்டு நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.
கருப்பாக இருப்பதால், இன வெறி தாக்குதல்கள் மற்றும் bullying எனப்படும் வம்புக்கிழுத்தல் போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்புவதற்காக, தங்கள் சொந்த இனத்தை மறைக்கும் முயற்சியில் மாணவர்கள் இறங்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.

National Society for the Prevention of Cruelty to Children (NSPCC) என்னும் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 2015க்கும் 16க்கும் இடையிலான காலகட்டத்திலிருந்து இன வெறித்தாக்குதல்களும் வம்புக்கிழுத்தல்களும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சிறுவர்களுக்கெதிரான 10,500 இன வெறுப்பு குற்றங்கள் 2017க்கும் 18க்கும் நடுவில் நிகழ்ந்துள்ளதாக அது தெரிவிக்கிறது, அதாவது நாள் ஒன்றிற்கு சராசரியாக 29 வெள்ளையரல்லாத சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சிறார் உதவி மையங்களுக்கு அழைக்கும் சிறுவர்கள் தங்களை வெள்ளையாக காட்டிக் கொள்வதற்காக மேக் அப்பை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்கள்.
10 வயது சிறுமி ஒருத்தி, நான் பிரித்தானியாவில்தான் பிறந்தேன், ஆனால் வம்புக்கிழுப்பவர்கள் என்னை எனது நாட்டுக்கு திரும்பிப் போகச் சொல்கிறார்கள்.
எனக்கு புரியவில்லை, நான் பிரித்தானியாவைச் சேர்ந்தவள்தானே என்கிறாள்.
என்னுடன் பழகினால், அழுக்கு தோல் உள்ளவளுடன் பழகாதே என தடுப்பதால் எனது நண்பர்கள் என்னுடன் சுற்றுவதில்லை என்கிறாள் அவள்.
அதனால் மேக் அப் பயன்படுத்தி என் முகத்தை வெள்ளையாக காண்பிக்க முயல்கிறேன், ஏனென்றால் பள்ளிக்கு செல்வதை விருப்பத்துடன் செய்ய விரும்புகிறேன் என்கிறாள் அந்த சிறுமி.
சிறார்களுக்கெதிரான இன வெறுப்பு குற்றங்களின் எண்ணிக்கை 2015க்கும் 16க்கும் இடையில் 8,683ஆக இருந்தது, 2017க்கும் 18க்கும் இடையில் 10,571ஆக உயர்ந்துள்ளதாக NSPCCயின் ஆய்வு தெரிவிக்கிறது.
இதுபோக ஆசியாவைச் சேர்ந்த சிறார்களும் இஸ்லாமிய குழந்தைகளும்கூட பெருமளவில் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
நிறத்தின் அடிப்படையில் இன வெறுப்புக்குள்ளாவதை தடுக்க மாணவர்கள் மேற்கொள்ளும் பரிதாப நடவடிக்கை: ஆய்வு! Reviewed by Author on May 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.