அண்மைய செய்திகள்

recent
-

அரிசி கஞ்சி அருந்துவதால் உடலுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா? -


நம்மில் பலரும் அரிசியை வடித்து விட்டு இதிலிருந்து கிடைக்கும் கஞ்சியை கொட்டுவது தான் வழக்கம்.
ஆனால் உண்மையில் உடல் நலத்தை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பது பலருக்கும் தெரிவதில்லை.
இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. கூந்தல் பிரச்சினை முதல் தோல் நோய் வரை பல நோய்களுக்கு தீர்வளிக்கின்றது.
தற்போது இதனை அருந்துவதானல் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு பார்ப்போம்.


  • அரிசி கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்ததாக இருக்கின்றன. அரிசிக்கஞ்சியை குடிப்பதால் வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்கள் கார்போஹைட்ரேட் சத்துகளை நொதித்து உடலுக்கு மிகுதியான சக்தியை உண்டாக்குகிறது.
  • அரிசிக் கஞ்சியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் தினமும் காலையில் அரிசி கஞ்சி பருகுபவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
  • அரிசி கஞ்சியை கோடைக்காலங்களில் பருகுபவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தேவை நிறைவு செய்யப்படுகிறது.
  • அரிசிக் கஞ்சியில் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது. எனவே சுரம் காய்ச்சல் ஏற்பட்ட நோயாளிகளுக்கு மூன்று வேளைகளும் சிறிதளவு அரிசி கஞ்சியை கொடுப்பதால், நோய்த் தொற்றுகள் நீங்கி, ஜூரமும் குறைவதோடு உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெற்றுத்தரும்.
  • கோடை காலங்களிலும், கெட்டுப்போன உணவுகள் சாப்பிடுவதாலும் சிலருக்கு வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. இதனால் உடலில் நீர்ச்சத்து வேகமாக குறைகிறது. இச்சமயங்களில் அரிசிக்கஞ்சி சாப்பிடுவதால் உடலில் நீர்சத்து இழப்பை ஈடுகட்டி, உடலுக்கு வலுவைத் தருகின்றது வயிற்றுப்போக்கு ஏற்படுவதை குறைக்கிறது.
  • அரிசி கஞ்சியும் பசியை தூண்டும் பானமாக இருக்கிறது. அதனுடன் சிறிது சீரகம் கலந்து குடித்தால் நன்கு பசியை தூண்டும். சாப்பிட்ட உணவும் எளிதில் செரிமானமாகும்.
  • அரிசி கஞ்சியுடன் திராட்சை பழங்களை சேர்த்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி பளிச்சென்று மிளிர வைக்கும்.
  • ஒரு காட்டன் துணியில் கஞ்சியை நனைத்து சிரங்கு உள்ள இடங்களில் கட்டி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்களுக்கு கடைப்பிடித்து வந்தால் சொறி, சிரங்கு ரணம் சீக்கிரத்தில் ஆறிவிடும்.
  • வேர்க்குருகளை போக்கும் சிறந்த மருத்துவ குணம் கொண்டதாக அரிசிக்கஞ்சி இருக்கிறது. தொடர்ந்து சில நாட்கள் வேர்க்குரு மீது அரிசி கஞ்சியை தடவி வந்தால் வேர்குருகள், தேமல் போன்றவை மறையும்.
  • அரிசி கஞ்சியை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மின்னும். குளித்து முடித்தவுடன் கஞ்சியை தலை முடியில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைமுடியை கழுவ வேண்டும்.

அரிசி கஞ்சி அருந்துவதால் உடலுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா? - Reviewed by Author on May 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.