அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சர் ரிசாட் பதியுதீன் நம்பிக்கையிலா பிரேரணை-மன்னார் தமிழரசு கட்சியினர் அதிரடி தீர்மானம்-படங்கள்

கடந்த வாராம் கூட்டு எதிர் கட்சியினால் வன்னி பாரளுமன்ற உறுப்பினரும் கைத்தொழி வணிக வர்தக அமைச்சருமான ரிசாட் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட தமிழராசு கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டத்தை மேலும் நீட்டிப்பதற்கு ஆதரவு வழங்குவத இல்லையா என்பது தொடர்பாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையிலா பிரேரனை தொடர்பாகவும் எவ்வாறு பாராளுமன்றத்தில் தீர்மானம் மேற்கொள்வது தொடர்பாக மன்னார் மாவட்ட தமிழ் அரசு கட்சி உயர்மட்ட குழுவின் கலந்துரையாடல் 18-05-2019 மாலை 4 மணியளவில்
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது தற்போது அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அவசரகாலச்சட்டத்தினால் தமிழ் மக்கள் திட்டம் இட்டு பழிவாங்கப்படுவதனாலும் பல்கலைகழக மாணவர்கள் முன்னால் மாகாணசபை உறுப்பினர்கள் மீது திட்டம் இட்டு குற்ற நடவடிக்கைகள் எடுப்பதனால் நிச்சயமாக அவசரகால சட்டத்தை நிச்சயாமக எதிர்க்கவேண்டும் என ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்ப்பட்டது

குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாரளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்

அவசரகால சட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இல்லாவிட்டாலும் பாராளுமன்றத்தில் நிச்சயம் வெற்றி பெரும் ஆனலும் இவ் அவசர கால நிலமையினை பயன்படுத்தி எமது மக்கள் பலிவாங்கப்படுகின்றனர்
எனவே நம்பிக்கையில்லா பிரேரணையின் காலப்பகுதி ஒரு மாதம் ஆகும் அவ் காலப்பகுதி நிறைவடைந்த பின்னர் மீண்டும் பாராளுமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் போது அதற்காக ஆதரவை வழங்கப்போவது இல்லை என எமது மன்னார் மாவட்ட உயர் மட்ட குழு தீர்மானிதுள்ளோம்.

அதே நேரத்தில் குண்டு வெடிப்பில் சம்மந்த பட்ட ஒருவரை விடுவிப்பதற்காக அமைச்சர் ரிசாட் பதிவுதீன் மூன்றுதடவை இராணுவதளபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும்

அவர் மூலமாக மன்னார் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு சீர்குழைந்துள்ளதாகவும் அதே நேரத்தில் அன்மையில் தாராபுரபகுதியில் அமைச்சருக்கு சொந்தமான விடுதியில் சந்தேத்திற்கு இடமான இலக்கத்தகடு கண்டுபிடிக்கப்பட்டது ஆனலும் குறித்த இலக்க தகடானது இலங்கை மோட்டார் வாகன அமைப்பினால்(RMP)  வினியோகிக்கப்படவில்லை எனவும் எதோ ஒரு வகையில் தவறான நடவடிக்கைகாகவே குறித்த இலகக்க தகடு பயன்பட்டிருக்கலாம் எனவும் இது தொடர்பான முழுமையான விசாரணைகள் நடத்துவதற்காகவாவது அவர் மீதி கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையியில்லா பிரேரனையை ஆதரித்து அவருக்கு இந்த தற்கொலை குண்டுதாக்குதலுக்கும் தொடர்பு உள்ளத இல்லையா என்பது தொடர்பாகவும் குறுகிய காலத்தில் அவர் எவ்வாறு செல்லவ்ந்தராக வந்தார் என்பது தொடர்பாகவும் விசாரிக்கவேண்டும் என தெரிவித்தார்.
அத்துடன் ஒட்டு மொத்த மன்னார் தமிழ் அரசு கட்சி உயர்மட்ட குழுவினராலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவாக வாக்களிக வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதது.
 















அமைச்சர் ரிசாட் பதியுதீன் நம்பிக்கையிலா பிரேரணை-மன்னார் தமிழரசு கட்சியினர் அதிரடி தீர்மானம்-படங்கள் Reviewed by Author on May 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.