அண்மைய செய்திகள்

recent
-

புலம்பெயர் மாணவர்களின் தமிழ் மொழி தேர்வில் 6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் -


தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழி எழுத்துத் தேர்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு LA MAISON DE EXAMENS 7,RUE RUE ERNEST RENAN 94114 ARCEIL இல் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த எழுத்துத் தேர்வு நிகழ்வு பிரான்சின் வெளி மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளதாக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்போது இம்முறை பிரான்சில் Île De France மற்றும் பிரான்சின் வெளிமாவட்டங்களிலும், குறிப்பாக ஸ்ரார்ஸ்பேர்க்,நீஸ்,போர்சோலை,முலுஸ்,துளுஸ்,றென்,தூர்,ஜியான்,போ,போர்தோ. நெவர் ஆகிய பிற மாவட்டங்கள் உள்ளடங்கலாக மொத்தம் 6 ஆயிரத்து 85 மாணவர்கள் தேர்வுக்குத் தோற்றியுள்ளனர்.
இந்நிலையில் எழுத்து பரீட்சையின் முன்னோடி நிகழ்வாக அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வாரத்திற்கு முன்னரே புலன் மொழித்தேர்வுகள் மூன்று நாட்கள் நடைபெற்றுள்ளன.

இம்முறை பிரான்சில் 12 ஆம் ஆண்டு வரையும் கற்று தேர்வு எழுதிய மாணவர்கள் 112 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வானது தமிழ் சோலை தலமைப்பணியக பொறுப்பாளர் க. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றுள்ளதுடன், அனைத்து தேர்விற்கும் பொறுப்பாக இருந்து செயற்பட்டவர் ச.அகிலன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் மாணவர்களின் தமிழ் மொழி தேர்வில் 6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் - Reviewed by Author on June 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.