அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் முடிவால் அகதிகள் படகு வருகை அதிகரிக்கும்! -


அகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டம் தொடர்பாக ஆஸ்திரேலிய நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு மீண்டும் படகுகள் வருகையை அதிகரிக்கக்கூடும் என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்திருகிறார்.

சமீபத்தில், அவுஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பெடரல் தேர்தலுக்கு பிறகு ‘எல்லைப் பாதுகாப்பு’ விவகாரமும் மருத்துவ வெளியேற்ற சட்டமும் பெரும் விவாதப்பொருளாக இருந்து வருகின்றது.

நவுரு மற்றும் மனுஸ்தீவில் இருக்கும் அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள உடல்நலம் பாதிக்கப்பட்ட அகதிகளை அவுஸ்திரேலியாவில் சிகிச்சை பெற மருத்துவ வெளியேற்ற சட்டம் அனுமதிக்கின்றது.
இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஓர் அகதியை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க சம்பந்தப்பட்ட அகதியுடன் மருத்துவர் உரையாடத் தேவையில்லை, அகதியின் மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் மருத்துவர் அவரை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க பரிந்துரைக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது.

அதே சமயம், இந்த முடிவு நவுருத்தீவில் உள்ள அகதிகளுக்கு மட்டுமே பொருந்தும். நவுருத்தீவில் தொலைப்பேசி வழியிலான மருத்துவ ஆலோசனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் இம்முடிவு எனக் கூறப்படுகின்றது.
“சம்பந்தப்பட்ட நோயாளியுடன் (அகதி) உரையாடாமல் அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க பரிந்துரைக்கலாம் என முடிவு எடுப்பது மூர்க்கத்தனமான ஏற்பாடு,” எனத் தெரிவிக்கிறார் பீட்டர் டட்டன்.
இவ்வழக்கில் பணியாற்றிய மனித உரிமை சட்ட மையத்தின் மூத்த வழக்கறிஞர் டேவிட் பூர்க், நோயாளியை சந்திக்காமல் மருத்துவ மதிப்பீட்டை வழங்குவது புதிதான ஒன்று கிடையாது, அதில் எந்த சர்ச்சையும் கிடையாது எனக் கூறியிருக்கிறார்.
“இது நூற்றுக்கணக்காவர்களுக்கு பொருந்தக்கூடும், அதுவே மீண்டும் படகுகள் வருகைக்கு வழி வகுக்கும். நாம் மரியாதையானவர்களை கையாளவில்லை, நாம் திட்டமிட்ட குற்ற கும்பலை (ஆட்கடத்தல்காரர்கள்) கையாண்டு கொண்டிருக்கிறோம்.

எந்த தகவலையும் அவர்கள் திரித்து மாற்றிக் கூறி அப்பாவிகளிடம் இருந்து பணம் வாங்குவார்கள்,” என உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கூறுகிறார்.
“படகுகள் வருகைக்கு மருத்துவ வெளியேற்ற சட்டம் வழிவகுக்காது. ஏனெனில், இது தற்போது மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள அகதிகளுக்கு மட்டுமே பொருந்தும்,” எனத் தெரிவித்திருக்கிறார் லேபர் கட்சியின் நிழல் உள்துறை அமைச்சரான கிறிஸ்டினா கெனேல்லி.
இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல், மருத்துவ உதவி தேவைப்படும் மனுஸ்தீவிலிருந்த 30 அகதிகள் மட்டுமே அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஆளும் லிபரல் கூட்டணி அரசு சொல்லியது போல் பெரும் எண்ணிக்கையிலான அகதிகள் அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் முடிவால் அகதிகள் படகு வருகை அதிகரிக்கும்! - Reviewed by Author on June 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.