அண்மைய செய்திகள்

recent
-

‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியீட்டுக்கு தயார்


தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவுள்ளது.

கடந்த மார்ச் மாதம் வெளியான இத்திரைப்படத்திற்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன் இம் மாதம் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 07ஆம் திகதி வரை கொரியாவின் போய்ஷன் நகரில் நடைபெறவிருக்கும் பிரசித்தி பெற்ற 23ஆவது  ‘போய்ஷன் சர்வதேச பெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில்’ (BIFAN)’ சூப்பர் டீலக்ஸ்’ திரையிடப்படவுள்ளது.

‘சூப்பர் டீலக்ஸ்’ போய்ஷன் பெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில் ‘வர்ல்ட் பெண்டாஸ்டிக் ப்ளூ’ பிரிவில் திரையிடப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ‘Andhadhun’, ‘Gully Boy’ மற்றும் ‘Manikarnika’ ஆகிய ஏனைய ஹிந்திய மொழி படங்களும் திரையிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்டத்தில் திருநங்கைகள் குழந்தைகளை கடத்துவதுபோல் நடிகர் விஜய் சேதுபதி பேசும் வசனம் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்ததுடன் திருநங்கைகளை அவமதிக்கும் காட்சியில் நடித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறப்பட்டது.

இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின் ஆகியோர் நடித்திருந்தனர். எனினும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் இந்த படம் விரைவில் ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்படவுள்ளது.

‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியீட்டுக்கு தயார் Reviewed by Author on June 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.