அண்மைய செய்திகள்

recent
-

உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை


எட்டாவது பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் 07-06-2019 (வெள்ளிக்கிழமை) பிரான்ஸில் தொடங்குகிறது. இதுவரை இந்தப் போட்டிகளுக்காக சுமார் 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.
இந்தாண்டு இப்போட்டிகளை நடத்தும் நாடான பிரான்ஸ், இன்று நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் தென்கொரியாவுடன் மோதவுள்ளது.
இதில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்து அணி, ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது.

ஒரு மாதம் நடைபெறும் இந்த உலகக்கோப்பை போட்டிகளுக்கு இது வரை 9,50,000 டிக்கெட்டுகள் விற்கனையாகி உள்ளன.
கால்பந்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
எந்தெந்த அணிகள் விளையாடுகின்றன?
1.பிரான்ஸ்
2.நார்வே
3.தென்கொரியா
4.நைஜீரியா
5.ஜெர்மனி
6.ஸ்பெயின்
7.சீனா
8.தென் ஆப்பிரிக்கா
9.இத்தாலி
10.பிரேசில்
11.ஆஸ்திரேலியா
12.ஜமைக்கா
13.இங்கிலாந்து
14.ஸ்காட்லாந்து
15.அர்ஜெண்டினா
16.ஜப்பான்
17.நெதர்லாந்து
18.கனடா
19.நியூசிலாந்து
20.கேமரூன்
21.சுவீடன்
22.அமெரிக்கா
23.சிலி
24.தாய்லாந்து

FIFA பெண்கள் உலகக் போப்பை கால்பந்து - 10 தகவல்கள்
இந்த போட்டிகளில் முதன்முறையாக VAR எனப்படும் வீடியோ அஸிச்டண்ட் ரெஃப்ரி சிஸ்டம் பயன்படுத்தப்படும்.
2019ஆம் ஆண்டு FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் 24 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும். இது 2015ஆம் வழங்கப்பட்ட தொகையைவிட இருமடங்கு அதிகமாகும்.
எனினும், ஆண்கள் உலகக் கோப்பை கால்பந்து அணிகளுக்கு வழங்கப்படும் 315 மில்லியன் பவுண்டுகளைவிட இது மிகக் குறைந்ததே ஆகும்.
பரிசுத் தொகையில் இவ்வளவு மாற்றம் இருப்பது பிஃபா போட்டிகளில் "ஆணாதிக்கம் வேரூன்றி இருப்பதை காண்பிப்பதாக" அமெரிக்க கால்பந்து வீரர் ஹோப் சோலோ தெரிவித்துள்ளார்.


கடந்த முறை வெற்றி பெற்ற அமெரிக்க அணி, இந்தாண்டு ஜூன் 11 அன்று தாய்லாந்து நாட்டுடன் முதலில் மோதுகிறது. இம்முறையும் இந்த அணி வெற்றி பெறும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
FIFA பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் முதன்முதலில் 1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் போட்டித் தொடரை அப்போது சீனா நடத்தியது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்போட்டிகள் நடத்தப்படும்.
இதுவரை பெண்கள் கால்பந்து உலகக்கோப்பையை அமெரிக்க அணி அதிக முறை வென்றுள்ளது (மூன்று முறை). இரண்டு முறை ஜெர்மனியும், ஜப்பான் மற்றும் நார்வே அணிகள் தலா ஒரு முறையும் வென்றுள்ளன.
சீனா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாடுகள் இதுவரை இப்போட்டிகளை தொகுத்து வழங்கியுள்ளன. இந்தாண்டு போட்டிகளை பிரான்ஸ் நடத்துகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஒன்பது நகரங்களில் உள்ள மைதானங்களில் இப்போட்டிகள் நடைபெறும்.


உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை Reviewed by Author on June 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.