அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நேரடி கலந்துரையாடல்--மன்னார் நகர சபை 05உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்பு படம்

மன்னார் மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நேரடியாக கலந்துரையாடி தீர்வை பெற்றுக்கொள்ளும் விசேட வலையமைப்பு கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை04-07-2019
 காலை 11 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட பெண்கள் மற்றும் இளைஞர் வலையமைப்பு மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு அமையம் ஆகியவை இணைந்து குறித்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர்.

மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் குறித்த நிகழ்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

குறித்த கலந்துரையாடலுக்கு மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு, தமது கிராமங்களில் காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக உள்ளுராட்சி மன்ற பிரதி நிதிகளுக்கு தெளிவு படுத்த கிராம மட்ட அமைப்புக்களின் பெண் பிரதி நிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புக்களின் பெண் பிரதி நிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

-மக்கள் பிரதி நிதிகள் சார்பாக மன்னார் நகர சபை உறுப்பினர்களான எஸ்.ஆர்.குமரேஸ்,ஜோசப் தர்மன்,செல்வக்குமரன் டிலான், திருமதி டிலானி குரூஸ், திருமதி வடிவுக்கரசி அகிய ஐந்து உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர்.

-அழைப்பு விடுக்கப்பட்ட ஏனை உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.

-குறிப்பாக மன்னார் நகர சபை தவிர்ந்த ஏனைய உள்ளுராட்சி மன்றங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்தனர்.
-குறிப்பாக வீட்டுத்திட்டத்தில் பாரபட்சம், மலசல கூடம் வழங்கும் திட்டத்தில் பாரபட்சம், அரச வேலைவாய்ப்புக்கள் அரசியல் செல்வாக்கில் வழங்குதல், யுத்தத்தில் பாதீக்கப்பட்டவர்கள் அரசின் உதவித்திட்டத்தில் புறக்கணிப்பு, வீதி புனரமைப்பு, போக்கு வரத்து இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கிராம மட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள் முன் வைத்தனர்.

பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் முன் வைக்கப்பட்ட போதும், மன்னார் நகர சபை உறுப்பினர்கள் ஐவரை தவிர ஏனைய உள்ளுராட்சி மன்றங்களின் பிரதி நிதிகள் கலந்து கொள்ளவில்லை.

இதனால் மன்னார் நகர சபை தவிர்ந்த ஏனைய உள்ளுராட்சி மன்றங்களை சேர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய பதிலை வழங்க குறித்த உள்ளுராட்சி மன்றங்களின் பிரதி நிதிகள் இல்லாமையினால் மக்கள் தமது விசனத்தை தெரிவித்துள்ளனர்.

-மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க உள்ளுராட்சி மன்ற பிரதி நிதிகள் வராமல் தேர்தல் காலங்களில் மட்டுமா வருவார்கள்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

-எனினும் சமூகமளித்த மன்னார் நகர சபை உறுப்பினர்கள் மக்கள் முன் வைத்ததுள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும், தமது கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
 








மன்னார் மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நேரடி கலந்துரையாடல்--மன்னார் நகர சபை 05உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்பு படம் Reviewed by Author on July 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.