அண்மைய செய்திகள்

recent
-

கர்ப்பிணி பெண்களுக்கு ஏன் சிசேரியன் பரிந்துரைக்கப்படுகிறது தெரியுமா? -


பிரசவம் ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பு ஆகும். ஒரு புதிய உயிரைப் பூமிக்கு அழைத்துவரும் 10 மாதத் தவத்தின் பரபரப்பு. எல்லா பெண்களுக்கும் சுகப்பிரசவம் சாத்தியமாவது இல்லை.
பல்வேறு காரணங்களால் சில பிரசவங்களில் சிசேரியன் அவசியமாகிறது.
இன்று பல பெண்கள் சிசேரியனே வலி இல்லாத பிரவத்துக்குச் சிறந்த வழி என சுகப்பிரசவ வாய்ப்பு இருந்தும் தாங்களாக முன்வந்த சிசேரியன் செய்து கொள்கின்றனர்.

சிலர் ஜோதிடத்தை நம்பி சிசேரியன் செய்கின்றனர். பொதுவாக சுகப்பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு தாய் அல்லது சேயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலேயே சிசேரியன் பரிந்துரைக்கப்படும்.
சிசேரியன் ஏன் பரிந்துரைக்கப்படுகிறது?
முன்பே தீர்மானிக்கப்பட்ட சிசேரியன் சுகப்பிரசவம் சாத்தியப்படாத நேரத்தில் செய்யப்படும் அவசர சிசேரியன் என இரண்டு வகைப்படும்.
நான்கு கிலோவுக்கு அதிகமான எடை உள்ள குழந்தையால் வெளியேற முடிவதில்லை.
குழந்தையின் மிருவான மண்டை ஓடு வெளியே வரும் முயற்சியில் ஒன்றன் மேல் ஒன்று நகர்ந்து அழுத்தப்பட்டு தலையின் அளவு குறையும்.

இதனால் 37 வாரங்கள் முடிவதற்குள் குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க தான் சிசேரியன் செய்யப்படுகிறது.
அதுமட்டுமின்றி பனிக்குடம் உடைந்து குழந்தை வெளியே வர முயற்சிக்கும் போது தாயின் சிறுநீர்ப்பையை குழந்தையின் தலை அழுத்த நேரிடும்.
திரும்பத் திரும்ப அழுத்தும்போது சிறுநீர்ப்பை அழுகிவிட வாய்ப்பு உள்ளது. இது பிஸ்டுலா எனப்படுகிறது. இதைத் தவிர்க்கவும் சிசேரியன் முறை பயன்படுகின்றது.
சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் சாத்தியமா?
முதல் பிரசவத்தில் கர்ப்பப்பை குறுக்கே வெட்டி தையல் போடப்பட்டிருந்தால் அடுத்த சுகப்பிரசவம் செய்வது சுலபம்.
செங்குத்தாக வெட்டப்பட்டுத் தையல் போட்டிருந்தால் அடுத்த பிரசவத்தில் தையல் பிரிய வாய்ப்பு உள்ளது.
ஃபோலிக் அமில ஏன் எடுக்க வேண்டும்?
ஒவ்வொரு கர்ப்பிணியும் கட்டாம் ஃபோலிக் அமில மாத்திரையை கர்ப்பமான நாளிலிருந்து 12 வாரங்களுக்குத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் இது குழந்தைக்கு ஏற்படும் பிறவித் தண்டுவடக் குறைப்பாடுகளைத் தவிர்க்கும்.

கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
  • கர்ப்பிணிகளுக்கு அதிகப்புரதம்,வைட்டமின், நார்ச்சத்து தேவை. பிரட் உள்ளிட்ட மைதா பொருட்களைத் தவிர்க்க வேண்டும் இது மலச்சிக்கல் உண்டாவத்தை தவிர்க்கும்.
  • நிறைய பழங்கள் சாப்பிட வேண்டும். பழத்தை சாறாக்கும் போது அதில் உள்ள நார்ச்சத்து இல்லாமல் போகிறது. எனவே பழங்களை அப்பிடியே சாப்பிட வேண்டும்.
  • சுகப்பிரசவத்துக்கு 8 மாதம் வரை வீட்டில் இருந்தபடியே சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம்.
  • தினமும் காலை,மாலை நடைப்பயிற்சி செய்வது நல்லது.
  • கர்ப்ப காலத்தில் கடினமான வேலைகள், அதிக எடை தூக்கமால் இருப்பது நல்லது.
  • சிசேரியன் ஆன பிறகு, குறைந்து இரண்டு மாதங்கள் ஓய்வு எடுப்பது நல்லது.
  • கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, வலிப்பு போன்ற கோளாறுகள் இருந்தால் அவசியம் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
  • பொதுவாக கர்ப்பிணிகளுக்குப் பிரசவத்தின் போது வயிற்றைச் சுத்தம் செய்ய எனீமா கொடுத்தால், மலக்குடல் கழிவுகள் மட்டும் வெளியேற்றப்படும். வயிற்றுள்ள ஜீரணமாகாத உணவு வெளியேற்றப்படாது.
கர்ப்பிணி பெண்களுக்கு ஏன் சிசேரியன் பரிந்துரைக்கப்படுகிறது தெரியுமா? - Reviewed by Author on July 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.