அண்மைய செய்திகள்

recent
-

காது வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்?


காதுவலி பொதுவாக அனைவரும் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான்.
காது வலிக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அந்தவகையில் தற்போது அந்த காரணங்கள் என்னென்ன என்பதையும் அதற்காக தீர்வு என்ன என்பதையும் பார்ப்போம்.
காது வலி ஏற்பட காரணங்கள்
  • தொண்டையில் அழற்சி காரணமாகவும் காது வலி ஏற்படலாம். நோய்க்கிருமிகள் தாக்கத்தின் விளைவாகவும் காது வலி ஏற்படலாம்.
  • சுவாசிப்பதில் தவறான முறையில் மூச்சு வெளியேற்றுவதும் காது வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். மூச்சு உறுப்புகளில் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் காதுவலி ஏற்படலாம்.
  • நீர்நிலைகளில் குதித்துக் குளிப்பதாலும், கடல் நீரில் குளிப்பதாலும் நோய்தொற்று நடுச்செவிக்குழல் மூலம் காதுக்குள் சென்று கடுமையான காது வலியை ஏற்படுத்தக்கூடும்.
  • சளியும் மூக்கடைப்பும் அதிகமாகும் போதும் காதுவலி வரும். அதிகமாக சிரத்தை எடுத்து மூக்கு சிந்தினாலும் காதில் வலி ஏற்படும்.
  • பற்சொத்தை, கடைவாய்ப்பல் வெளிவராதிருத்தல், நாக்கு மற்றும் வாய்ப்புண்கள், டான்சில் சதை வளர்ச்சி , கழுத்தெலும்புத் தேய்வு, புற்றுநோய் போன்ற நலிவுகள் மற்ற உறுப்புக்களைப் பாதிப்பதினால் காதில் வலி ஏற்படக்கூடும்.
செய்ய கூடாதவை
  • காதுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்கிற திரவம் சுரப்பதால் அழுக்கு தானே வெளியேறிவிடும். அதனால் காதுக்குள் குச்சி, பட்ஸ் விட்டு சுத்தம் செய்யக் கூடாது.
  • 80 முதல் 85 டெசிபல் வரைதான் நம் காது சப்தத்தைத் தாங்கும். அதற்கு மேல் என்றால் சவ்வு கிழிந்துவிடும். அதனால் அதிக சப்தத்தைத் தவிர்க்கவும்.
  • காதில் இயர் போன் வைத்துக் கொண்டு, அதிக சத்தத்தில் வீடியோ கேம்ஸ், படம் பார்ப்பது செல்போன் பேசினால் காது வலிக்கு அதிக காரணமாகும்.
  • நீண்ட நேரம் செல்போன் பேசினால் காது வலிக்கும். அதனால் காது மாற்றி மாற்றிப் பேசப் பழகிக் கொள்ள வேண்டும்.
தீர்வு
  • காது வலி வந்தால் தேங்காய் எண்ணெய்யை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு, மிதமான சூட்டில் காதில் விட்டால், காதில் இருக்கும் புண் ஆறி, வ‌லி குறையு‌ம்.
  • தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரைக் குடித்தால் காது வலி குறையும்.
  • தாழ‌ம்பூவை நெரு‌ப்பு‌த் தண‌லி‌ல் கா‌ட்டி கச‌க்‌கி சாறு ப‌ி‌‌ழி‌ந்து அ‌தி‌ல் ‌சில து‌ளிகளை கா‌தி‌ல் ‌விட்டால் காது வ‌லி, கா‌தி‌ல் தோ‌ன்று‌ம் க‌ட்டி ஆ‌கியவை குணமாகு‌ம்.
  • மருதா‌ணியின் வேரை நசு‌‌க்‌கி‌ அதில் வரும் சா‌ற்‌றினை கா‌தி‌ல் ‌விட்டால், காது வ‌லி ‌தீரு‌ம்.
  • கொஞ்சம் ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் ஒரு ‌கிரா‌ம்பை போட்டு சூடு செ‌ய்து, பின் அ‌ந்த எ‌ண்ணெய்யை வ‌லி உ‌ள்ள காதி‌ல் விட்டா‌ல் ‌விரை‌வி‌ல் வ‌லி குறையு‌ம்.
  • துளசி இலையை வெந்நீரில் அரைத்து காதில் சில சொட்டுகள் விட, ஏற்பட்ட தொற்று நோய் தீரும்.
  • காதில் அவ்வப்போது 2-3 சொட்டு வெதுவெதுப்பான கடுகு எண்ணெய் சில துளிகள் விட்டு 10-25 நிமிடம் அசையாமல் இருக்கவும். இது காதில் உள்ள அழுக்கை எளிதாக சுத்தம் செய்யும்.
  • காதில் ஆப்பிள் சைடர் வினிகர் முக்கிய பஞ்சைக் கொண்டு அடைத்தால் பாக்டீர்யா மற்றும் வைரஸ்கள் வளருவதை அடியோடு அழிக்கலாம்.
காது வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்? Reviewed by Author on July 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.