அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-கால்நடை வளர்ப்போர் பண்ணைகளை பதிவு செய்யாவிடில் அரசுடமையாக்கப்படலாம்.

கால்நடை பண்ணையாளர்கள் தங்கள் கால்நடை பண்ணைகளை பதிவு செய்யாவிடில் எந்த கால்நடையும் சட்டப்படி அரசுடமை ஆக்கப்படலாம் என வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கால்நடை பண்ணையாளர்களுக்கு வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் விடுத்திருக்கும் வேண்டுகோளில் சிறியதோ பெரியதோ எந்த ஒரு பண்ணையையும் திணைக்களத்தில் பதிவு
மேற்கொள்ளாது நடாத்திச் செல்வது சட்டப்படி குற்றமாகும் என
தெரிவித்துள்ளது.

அத்துடன் காதடையாளமிடாத எந்த ஒரு கால்நடையும் சட்டப்படி கால்நடை
வளர்ப்போர் உரிமை கோர முடியாது என்பதுடன் காதடையாளம் இடப்படாத எந்த ஒரு கால்நடையும் சட்டப்படி அரசுடமை ஆக்கப்படலாம் எனவும் தெரிவித்திருப்பதுடன்

பதிவு செய்யப்படாத பண்ணைகளை உடன் பதிவு செய்யவும் காதடையாளம் இடப்படாத விலங்குகளுக்கு காதடையாளம் இட்டுக்கொள்ளும்படியும் அருகில் உள்ள அரசாங்க கால்நடை வைத்தியர் அலுவலகத்தை நாடும்படியும் வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் கால்நடை வளர்ப்போரை வேண்டியுள்ளது.

மன்னார்-கால்நடை வளர்ப்போர் பண்ணைகளை பதிவு செய்யாவிடில் அரசுடமையாக்கப்படலாம். Reviewed by Author on July 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.