அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் இனப்படுகொலையின் சாட்சியமாக இறுதி வரை-அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதனின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு-சாள்ஸ் நிர்மலநாதன்mp

முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் சாட்சியமாக இறுதி வரை பல்வேறு தளங்களிலும் தனது சாட்சியை துணிவுடன் பதிவு செய்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதனின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு .....

வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்...

இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் கொடூரங்களில் ஒன்றான வலைஞர் மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து அத்தாக்குதலின் சாட்சியமாக இறுதிவரை குரல் கொடுத்துக் கொண்டிருந்த உயிர் தடிப்புள்ள மனிதம் இன்று எம்மை விட்டு விட்டுப் பிரிந்துள்ளது.

1996இல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்கப்பட்டு முல்லைத்தீவு நகரையும் சூழ இருந்த கிராமங்களையும் சேர்ந்த மக்கள் அரசின் உதவிகள் எதுவுமின்றி மீள்குடியமர்ந்து கொண்டிருந்த இடர் மிக்க நாட்களில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் முல்லைத்தீவின் பங்குத்தந்தையாக பொறுப்பெடுத்தார் .

உட்கட்டுமானங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் சிங்கள ஏகாதிபத்தியத்தால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைக்கும் முகம் கொடுத்துக்கொண்டு மீள்குடியேறிய இம்மக்களுக்கு மதம் கடந்து பல்வேறு மனிதாபிமான பணிகளையும் உதவிகளையும் செய்து அம்மக்களின் அன்பை வென்றெடுத்தார்.

2009 இல் முள்ளிவாய்க்காலில் தமிழர் இன அழிப்பு உக்கிரம் அடைந்த நாட்களில் சிங்கள இராணுவத்தால் அரங்கேற்றப்பட்ட வலைஞர் மடம் தேவாலயத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலில் காயமடைந்து முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் இரத்த சாட்சியமாக இறுதி வரை பல்வேறு தளங்களிலும் தனது சாட்சியை துணிவுடன் பதிவு செய்தவர்.

அருட்தந்தை எம்முடன் வாழந்த கடந்த காலங்கள்...

1 - இளம்குருவாக 1970ன் நடுப்பகுதியில் புதுக்குடியிருப்பு பங்குத் தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் மல்லிகைத்தீவில் புனித வனத்து (கடற்கரை) அந்தோனியார் கோவிலை உருவாக்கியவர்......

2 - இளம்குருவாக 1970ன் நடுப்பகுதியில் புதுக்குடியிருப்பு பங்குத் தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் இரணைப்பாலையில் புனித பாத்திமா அன்னை ஆலயத்தை நிர்மாணித்தவர்....

3 - கடந்த 1980ன் நடுப்பகுதியில் மாங்குளம் பங்குத் தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் பல தமிழ் இளைஞர்களுக்கு உதவி புரிந்ததனால் பாதுகாப்புப் படையினரின் சொல்லொனா நெருக்கடிளுக்கு ஆளாகி உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்....

4 - முல்லைத்தீவுப் பங்குத் தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் சுணாமிப் பேரழிவின் போது கடலிலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் டிசம்பர் 26ல் திருக்குடும்பத் திருநாட் திருப்பலியை ஒப்புக் கொடுத்து எல்லாம் வல்ல மூவொரு இறைவனின் கருவியாகச் செயற்பட்டதால், முல்லைத்தீவில் தற்போது வசிக்கின்ற பலருடைய உயிரைக் காப்பாற்ற உதவி புரிந்தவர்

5 - 2014ல் சுணாமிப் பேரழிவால் முல்லைத்தீவில் இறந்துபோன 3000க்கும் மேற்பட்டவர்களது உடலங்களை நல்லடக்கம் செய்யும் பணியில் தன்னுடன் பணியாற்றிய உதவிக் குருக்களது ஒத்துழைப்போடு பெரும் பங்காற்றியவர்......

6 - சுணாமி நினைவு மண்டபம் முல்லைத்தீவில் நிறுவுவதில் பெரும் தொண்டாற்றியவர்......

7 - இறுதி யுத்த காலத்தின் பின்னரும் மாங்குளம் பங்குத் ததையாக மீண்டும் பணியாற்றி அழிந்துபோன வன்னி மன்ணை மீளக் கட்டி எழுப்பும் பணியில் தன்னை அர்ப்பணித்தவர்.....

தமிழ் மக்களின் விடுதலை போராட்ட வரலாற்றில் தலைமையாலும் - தளபதிகளாலும் - போராளிகளாலும் நேசிக்கப்பட்ட மகத்தான மனிதர்.

கிறிஸ்தவ அருட்தந்தையாக இருந்தும் தமிழர் தாயகத்தில் மதங்களைக் கடந்து பணியாற்றி பல மக்களின் உள்ளங்களில் இன்று வரை வாழ்ந்து வரும் மகத்தான மனிதனாக வாழ்ந்து - வாழ்ந்து கொண்டிருக்கப் போகும் அருட்தந்தையின் இழப்பு யாழ் மறைமாவட்டம் மட்டுமல்ல ஒட்டு மொத்த ஈழத் தமிழருக்கும் பேரிழப்பாகும் என வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



தமிழர் இனப்படுகொலையின் சாட்சியமாக இறுதி வரை-அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதனின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு-சாள்ஸ் நிர்மலநாதன்mp Reviewed by Author on July 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.