அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாணை -


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இரகசியமான முறையில் இலங்கை போர்க்குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் குறித்து வழக்கு விசாரணை செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர்க் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இலங்கை படையினரின் சிரேஸ்ட அதிகாரிகள் பலர் தொடர்பில் இவ்வாறு வழக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் பணியாற்றிய அதிகாரியான யாஸ்மீன் சூகா இது பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
வழக்கு விசாரணைகளை நடாத்தி அது தொடர்பில் கடந்த 2015ம் ஆண்டு கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக சூகா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இந்த விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வித விபரங்களையும் அறிவிக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

இரகசியமாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது சாட்சியாளர்கள் சத்தியக் கடதாசிகளை வழங்கியுள்ளதாக யஸ்மீன் சூகா கூறியுள்ளார் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், யஸ்மீன் சூகா எங்கு எப்போது இந்த விடயங்கள் பற்றி அம்பலப்படுத்தினார் என்பது பற்றியோ இலங்கையின் எந்தெந்த இராணுவ உயர் அதிகாரிகள் தொடர்பில் போர்க்குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட்டது என்பது பற்றியோ செய்தியில் விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாணை - Reviewed by Author on July 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.