அண்மைய செய்திகள்

recent
-

தொண்டை வலியால் அவஸ்தையா? இதோ எளிய பாட்டி வைத்தியம் -


பொதுவாக மழைக்காலங்களில் நம்மில் பலருக்கு அடிக்கடி தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், தொண்டையில் எரிச்சல், தொண்டையில் கரகரப்பு, தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு தோன்றுவதுண்டு.

தொண்டை வலி என்பது எல்லா வயதினருக்கும் எந்த நேரத்திலும் வரக்கூடியது. இவ்வாறு தொண்டை வலி ஏற்பட்டால் எச்சில் விழுங்கக்கூட முடியாது. இதனால் நாள் முழுவதும் பெரும் அவஸ்தைக்குள்ளாகுவதுண்டு.
சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இதிலிருந்து விடுபட நமது முன்னோர்கள் இந்த காலத்தில் கையாண்ட பாட்டி வைத்திய முறைகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

  • திரிபலா சூரணத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். சிறிது நேரம் கொதித்த பிறகு அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு அந்நீரை சிறிது ஆறவிட்டு பின்னர் தொண்டையில் படும்படி வாய் கொப்பளிப்பதன் மூலம் தொண்டை கரகரப்பு நீங்கும்.
  • வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் தொண்டை புண்கள் ஆறும், தொண்டை வலியும் நீங்கும்.
  • திரிகடுகம் என அழைக்கப்படும் சுக்கி, மிளகு, திப்பிலி மூன்றையும் வறுத்து நன்கு பொடி செய்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை வலி சரியாகும்.
  • வெதுவெதுப்பான நீரில் உப்பு சிறிதளவு சேர்த்து தொண்டையில் படும்படு அடிக்கடி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி நிவாரணம் அடையும்.
  • சிறிதளவு வசம்பை எடுத்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து மென்று கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால் தொண்டை வலி குறையும்.
  • தொண்டை வலி போக, துளசி இலை மற்றும் கற்பூரவள்ளி இலையை மென்று கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கலாம். இதன் மூலம் தொண்டை வலி குணமாகும்.
  • இஞ்சியை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்தால், சில நிமிடங்களில் தொண்டை கரகரப்பு சரியாவதுடன் புத்துணர்சியும் கிடைக்கும்.
  • தயிர் உடலுக்கு அதிக குளர்ச்சி தரும் பொருள் என்பதால் குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடாமல், அறை வெப்ப நிலையில் வைத்து தயிரை சாப்பிட்டால் தொண்டை பிரச்சனை சரியாகும்.
  • சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர தொண்டை கரகரப்பு விரைவில் குணமாகும்.
  • அதிமதுரத்துண்டு ஒன்றை வாயில் வைத்துக்கொண்டிருந்தால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். அந்த உமிழ்நீரை விழங்கினால் தொண்டை கரகரப்பு உடனடியாக நீங்கவதுடன் தொண்டையில் கட்டியுள்ள சளியும் கரைந்து விடும்.
  • பால் இல்லாமல் தேநீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு ஓடிவிடும்.
  • முந்திரிப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு சற்று தள்ளியே நிற்கும்.
  • வல்லாரை சாற்றில் அரிசித்திப்பிலியை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவேண்டும். உலர்த்திய அரிசித்திப்பிலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.
  • அரச மரப்பட்டையை வெட்டி எடுத்து அதன் வெளிப்புறத் தோலை சீவிவிட்டு உட்புறப் பட்டையை மட்டும் எடுத்து நன்கு துண்டாகப் வெட்டி வெயிலில் உலர்த்தி கல்லுரலில் இடித்து பொடி செய்து, சல்லடை வைத்து சலித்து எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த தூளை இரண்டு சிட்டிகை எடுத்து நீரில் ஊறவைத்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு குறையும்.
தொண்டை வலியால் அவஸ்தையா? இதோ எளிய பாட்டி வைத்தியம் - Reviewed by Author on July 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.