அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளாங்குளம் சேவாலங்கா கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்....


வெள்ளாங்குளம் சேவாலங்கா கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்....ஜீவனோபாய பயிர்கள் அனைத்தையும் சேதப்படுத்தி செல்கிறது யானை வேலி அமைத்துத் தருமாறு மாந்தை  மேற்கு பிரதெச செயலகம் மாவட்டச் செயலகத்திற்கு பல வருடங்களாக அறிவித்தல் விடுத்தபோதும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனவே வடக்கு மாகான ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் நேரடியாக தலையிட்டு எமது பகுதிக்கு யானை வேலியினை அமைத்து தந்து எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கிராமத்து மக்கள் கருத்து தெரிவிக்கையில்
வெள்ளாங்குளம் பகுதி விவசாயமும் மேட்டுநிலப்பயிர்ச் செய்கைகளுமே எங்களது பிரதான தொழில் இரண்டு வருடங்களுக்கு முன் வெறும் வாழை மற்றும் பப்பாளி பயிர்ச்செய்கை மூலமாக  ஐம்பது தொடக்கம் எழுபத்தைந்தாயிரம் ரூபா வரை மாத வருமான பெற முடிந்தது ஆனால் இப்பொழுது போட்ட முதலை காப்பாற்றுவதே கடினமாக உள்ளது  அவ்வளவுக்கு காட்டு யானைகளின் அட்டகாசம் உள்ளது.

நீர் இறைத்து சிறிது நேரத்தில் தோட்டத்தினுள் யானை புகுந்து பழ மரங்களையும் செடிகளையும் பிடுங்கி சேதப்படுத்தி விடுகிறது.கடந்த ஏழு வருடங்களாக கிராம சேவையாளர் ஊடாக பிரதேச செயலாளர் மாவட்டச்செயலருக்கு அறிவித்தபோதும் எமக்கான எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

அதனால் கௌரவ வடமாகான ஆளுநர் அவர்களின் கவனத்திற்கு எமது பிரச்சனைகளை கொண்டு வருகிறோம் ஆளுநர் அவர்கள் எமது கிராமத்து மக்கள் அனைவருக்கும் யானை வராம இருக்க மின்சார வேலியினை அமைத்து தந்தால் நாங்கள் விவசாயம் மற்றும் தோட்டப்பயிர்ச் செய்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் இல்லை எனில் எங்களால் தொடர்ந்தும்  தோட்டப்பயிர்ச் செய்கை செய்ய முடியாமல் உள்ளது.

எமது வாழ்வாதாரம் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் உள்ளது எமக்கிருந்த தண்ணீர் பிரச்சனையை கூட நிறைய பணம் செலவழித்து  குழாய் கிணறுகள் மூலம் ஊக்கமாக தோட்டங்கள் செய்யும் போது இந்த யானைகளால் நாங்கள் பாரிய பொருளாதார பின்னடைவுகளை சந்திக்கிறோம். எனவே கௌரவ ஆளுநர் அவர்களே நாங்கள் எல்லா இடங்களும் அறிவித்து எந்த பயனும் இல்லை எனவே  கௌரவ ஆளுநர் தலைமையில் எமது கிராமத்து மக்களின் வேண்தலை நிறைவு செய்து தந்து எமது வாழ்வாதாரத்தினை உயர்த்துவீர்கள் என்று நம்பிக்கை கொள்வதாக   வெள்ளாங்குளம் சேவாலங்கா கிராமத்து மக்கள் தெரிவித்தனர்.

வெள்ளாங்குளம் பகுதியில் காட்டு யானை அட்டகாசம் தொடர்பாக மன்னார் மாவட்ட செயலர் சி.ஏ.மோகன்றாஸ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது
வெள்ளாங்குளம் சேவாலங்கா கிராமத்தில் காட்டுயானைகள் விவசாயிகளின் தோட்டப்பயிர்களை சேதப்படுத்தியது தொடர்பாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளரால் அறிக்கை எதும் எனக்கு சமர்ப்பிக்கப்படவில்லை அப்படி அறிக்கை வந்தவுடன் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மன்னார் மாவட்டச் செயலர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்

இதே வேளை வெள்ளாங்குளத்தில்  காட்டு யானை சேதப்படுத்திய இடங்களையும் அந்த மக்களையும் மாந்தை மேற்கு பிரதெச சபை தவிசாளர் செல்லத்தம்பு மற்றும் உறுப்பினர் பகிரதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

வெள்ளாங்குளம் சேவாலங்கா கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்.... Reviewed by Author on July 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.