அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. பேஸ்புக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அபராதம் விதிப்பு!


தங்கள் பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடியதற்காக, பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பது பேஸ்புக். புதிய நண்பர்களை உருவாக்கவும், தங்கள் வர்த்தக தேவைகளை விரிவுப்படுத்தவும் உலகில் பலரும் இதனை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்திற்கு, தங்களது பயனாளர்களின் ரகசிய தகவல்களை பேஸ்புக் திருடிக் கொடுத்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனம் தங்களது தவறை ஒப்புக்கொண்டதுடன், மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.
எனினும், அமெரிக்க வர்த்தக ஆணையம் கடந்த மார்ச் மாதம், பேஸ்புக் நிறுவனத்தின் மீதான புகாரின் முழு விவரம் அறிய விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையில், 2011ஆம் ஆண்டு மேற்கொண்ட தனிப்பட்ட நபர்களின் தகவல்களை கசிய விடுவதில்லை எனும் உடன்பாட்டுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.





இதனைத் தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் 3, 42, 000 கோடி) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இது பேஸ்புக்கின் கடந்த ஆண்டு வருமானத்தில் 9 சதவிதம் ஆகும்.
ஒரு தொழில்நுட்ப நிறுவனம் இவ்வளவு பெரிய அபராத தொகையை செலுத்த இருப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. பேஸ்புக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அபராதம் விதிப்பு! Reviewed by Author on July 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.