அண்மைய செய்திகள்

recent
-

25 வீடுகளை கொடுத்து விட்டு 30 போஸ்டர்களை ஒட்டிவிட்டு கால்பந்து விளையாடி கடல் குளிப்பவருக்கு வாக்கு போட வேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கு இல்லை---சாள்ஸ் நிர்மலநாதன்MP

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உரிமை விடையங்களின் தீர்வு தொடர்பாக பகிரங்கமாக வாக்குறுதி வழங்குபவருக்கு மாத்திரமே தமிழ் மக்கள் வாக்களிப்பார்களே தவிர மக்களின் முன்பாக கால்பந்து விளையாடிவிட்டும் கடல் குளிப்பதாகவும் கூறுபவர்களுக்கு வாக்களிக்கவோ ஆதரிக்கவோ போவதில்லை என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்

மன்னார் நகரசபை மண்டபத்தில் நேற்று மாலை இடம் பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் நாடுபூராகவும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது ஒரு பக்கம் பொதுஜன பேரமுன சார்பாக கோத்தபாய ராஜபக்ஸவிம் பெயரும் மறுபுரம் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பா சஜித் பிரேமதாஸ வும் இன்னும் பலரின் பெயரும் பத்திரிக்கைகளில் வந்த வண்ணம் உள்ளது இவர்களில் எந்த வேட்பாளர்களுக்கு எந்த கட்சியினர் ஆதரவளிக்க போகின்றார்கள் என்ற விடயமும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது

ஜானாதிபதி வேட்பாளர் யார் வந்தாலும்
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்காண தீர்வு விடயத்திலும் குறிப்பாக இரண்டு வருடங்களுக்கு முன்னாபக வழிநடத்தல் குழுவால் சமர்பிக்கப்பட்ட யாப்பு சார்ந்த விடயங்களில்  தமிழ் மக்களின் காணிகளுக்குள் பூர்வீக நிலங்களுக்குள் நடை பெறும் அத்து மீறிய சிங்கள குடியேற்றம் தொடர்பாகவும் தமிழ் பகுதிக்குள் அதிகளவான மாற்று இன  அரச நியமனங்கள் வழங்கள் தொடர்பாகவும் எல்லாவற்றையும் விட அரசியல் கைத்திகளின் விடயம் என்பன தொடர்பாக தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் விதமாக பகிரங்கமாக இவற்றை எல்லாம் சரியான முறையில் நிறைவேற்றி தருவதாக யார் வாக்குறுதி தருகின்றார்களோ அவர்களுக்கு மத்திரமே இம் முறை தமிழ் மக்களும் ஆதரவு கொடுப்பார்கள் நானும் ஆதரவு கொடுப்பேன் என தெரிவித்தார்

அதை விடுத்து 25 வீடுகளை கட்டி கொடுத்து 30 போஸ்ரர்களை ஒட்டுவதும் வெறுமனே  கால்பந்து விளையாடிவிட்டு வாக்களிக்குமாறு கோருவது வெறும் அரசியல் நிகழ்வே என தெரிவித்துள்ளார்

இங்கு வீடுகளை கட்டிகொடுக்கும் அமைச்சர் சஜித் பிரேம தாசா முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களில் சிங்கள் குடியேற்றம் ஒன்றை அமைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றார் அதை நாங்கள் தடுத்து நிறுத்திய போதும் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி வீடுகள் அமைக்கப்பட்டுவதுகின்றது.

அப்படியேன்றால் இப்படியான ஒரு நிலைப்பாட்டில் இருக்கும் ஒரு அமைசருக்கு நாங்கள் எவ்வாறு  ஆதரவை வழங்குவது என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் கோத்தாபாய ராஜபக்ஸ அண்மையில் தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாவிட்டாலும் நான் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்ததாக  ஊடகங்கள் மூலமாக அறிந்தேன் உண்மையில் சஜித்பிரேம தாஸாவாக இருந்தாலும் கோத்தாபய ராஜபக்ஸவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் சிறுபாண்மை சமூகத்தின் வாக்குகள் இல்லாமல் நிச்சயாமாக ஜனாதிபதியாக முடியாது. கோத்தாபாயராஜ பக்ஸ இறுதி யுத்ததில் தமிழ் மக்களின் கருவருத்தவர் அவர் எந்த அடிப்படையில் தமிழ் மக்களின் வாக்கை கோருகின்றார்

எனவே தேர்தல் அறிவுப்பு வரும் போது யார் தமிழ் மக்களின் பிரசைனைகளை நேரடியாக தீர்த்துதருவதாக வாக்குருதி வழங்க்குகிறார்களோ அவர்களுக்கே எங்கள் ஆதரவு என தெரிவித்துள்ளார்.

25 வீடுகளை கொடுத்து விட்டு 30 போஸ்டர்களை ஒட்டிவிட்டு கால்பந்து விளையாடி கடல் குளிப்பவருக்கு வாக்கு போட வேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கு இல்லை---சாள்ஸ் நிர்மலநாதன்MP Reviewed by Author on August 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.