அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-போருக்கு பின்னரான நல்லிணக்க செயல் முறை தொடர்பான பயிற்சி நிகழ்வு

தொடர்பாடலுக்கான பயிற்சிமையத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் போருக்கு பின்னரான நல்லிணக்க செயல்முறைகளை சக்திமயப்படுத்தல் எனும் தொணிப்பொருலில் மன்னார் மாவட்டத்தில் கிராம ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் சிறப்பாக செயற்படும் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளுக்கான வன்முறையற்ற தொடர்பாடல் தொடர்பான இரண்டு நாள் பயிற்சிபட்டறையானது நேற்று 17-08-2019 தொடக்கம் இன்று 18-08-2019 வரை மன்னார் கிராமிய அபிவிருத்தி நிறுவன கேட்போர் கூடத்தில் தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் மன்னார் செயற்திட்ட அலுவலர் திரு ஜோண்சன் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த பயிற்சிபட்டறையில் இன மத ரீதியான முரண்பாடுகளை வன்முறையற்ற தொடர்பாடல் மூலம் சீர் செய்வது தொடர்பாகவும் மொழி சார் உணர்வு சார் விடயங்களினால் இனங்கள் மதங்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வும் ஏனையவர்கள் மட்டில் அவர்களின் உணர்வு தேவைகளை கண்டரிந்து செயல்படுதல் தொடர்பாகவும் வன்முறையற்ற தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின்(CCT) விரிவுரையாளரும் மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்ட முகாமையாளருமான திரு.பெனிக்னஸ் மூலமாக விரிவாக தெளிவுபடுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் இளையோர் யுவதிகள் உட்பட சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

குறித்த நிகழ்வுகளின் மூலம் பயிற்சி பெற்ற உறுப்பினர்களை உட்படுத்தி மாவட்ட ரீதியில்  செயற்படகூடிய சிவில் அமைப்பு ஒன்றை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளும் முன்னேடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.







மன்னார்-போருக்கு பின்னரான நல்லிணக்க செயல் முறை தொடர்பான பயிற்சி நிகழ்வு Reviewed by Author on August 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.