அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-காணி சட்டம் தொடர்பான விளக்கமளிக்கும் கருத்தமர்வு-படங்கள்

சூழல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனமானது (எக்டோ) யுத்ததிற்கு பிற்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்ற மக்களின் காணி உரிமைகளை பாதுகாக்கும் செயற்றிட்டத்துடன் அம்மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் செயற்றிட்டங்களை கிரம ரீதியில் தெரிவு செய்து பணியாற்றி வருகின்றது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைபற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட கொக்குத்தொடுவாய் வடக்கு கொக்குத்தொடுவாய் மத்தியபகுதி  கொக்குழாய் மேற்கு ஆகிய பெரு நிலப்பரப்பு அடங்கிய கிராமங்களான உத்தராயன் குளம் (நெளுங்குளம்) ஆமையன்குளம் (கிரிபெந்வெவா) கூமாவடுக்குளம்  நாயடிச்சமுறிப்பு சிவந்தாமுறிப்புகுளம் தட்டாமலை குஞ்சுக்குளம்(டிகிரிவெவ) சகலாற்று வெளி ஆகிய வயல் வெளிகளை மொத்தப்பரப்பு 1615 ஏக்கர் கெவூலு ஓயா மகாவலி திட்டம்  என்ற போர்வையில் மகாவலி( டு) வலயம் எனும்  திட்டத்தின் கீழ் பரிமுதல் செய்யப்படுவது தொடர்பாகவும் . அதனை செய்வது மகாவலி அதிகார சபை மற்றும் அனுராதபுர அரசாங்க அதிபர். என்பது தொடர்பாக நேற்றைய தினம்  06-08-2019 மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது

குறித்த கிராமத்தினை சேர்ந்தவர்கள் 1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் 01ம் திகதியில் இருந்து 1984 டிசம்பர் 15ம் திகதி தமது நிலங்களில் இருந்து  அடித்து துரத்தப்பட்ட் இளைஞர்கள் குழந்தைகள் எல்லாமாக 170 பேர் கொள்ளப்பட்டமை தொடர்பாகவும் உயிர்களையும் உடமைகளையும் இழந்து இருக்கின்ற மக்களின் நிலங்களை சிங்கள மக்களுக்கு தனித்து வழங்குவது அரசியல் அமைப்பு சட்டத்தின் உறுப்புரை 12.1 சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற கோட்பாடு மீறப்படுவதோடு உறுப்புரை 14. (1H ) தமது காணிக்குள் தாம் நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது.

ஏன்   என்பது தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளது.

அத்துஅம் குறித்த சட்டத்திற்கு முறனான செற்பாடுகளை நிறுத்துவதற்கும் அக் கிராமத்தினுடைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலையான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கும் அதுதொடர்பான நீதியான விசாரணை ஒன்று நடைபெற வேண்டும் என மக்கள் கேட்டுக்கொண்டமையினால் அன்றய நாளே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பிரச்சினை தொடர்பான முறைப்பாட்டு கடிதம் ஒன்று பாதிக்கப்பட்ட மக்களின் முன்னிலையில் எமது சுழல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தினூடாக தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.




மன்னார்-காணி சட்டம் தொடர்பான விளக்கமளிக்கும் கருத்தமர்வு-படங்கள் Reviewed by Author on August 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.