அண்மைய செய்திகள்

recent
-

செவ்வாய் கிரகத்தில் மலை உச்சியை படம் பிடித்த நாசாவின் ரோபோ -


செந்நிற கிரகமான செவ்வாய் கிரகம் தொடர்பில் ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கியூரியோசிட்டி ரோவர் எனப்படும் ரோபோ ஒன்றினை சில வருடங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்திருந்தது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் நகர்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்த ரோபோ அவ்வப்போது ஆச்சரியமூட்டும் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தற்போது செவ்வாய் கிரகத்தில் தென்படும் சிறிய மலை உச்சி ஒன்றினை படம் பிடித்து அனுப்பியுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் Gale Crater என அழைக்கப்படும் பகுதியில் இம் மலை உச்சி காணப்படுகின்றது.

Gale Crater பகுதியில் 3.4 மைல்கள் பயணம் செய்தே இப் புகைப்படத்தினை கியூரியோசிட்டி ரோவர் படம் பிடித்துள்ளது.
இதேவேளை இப்படமானது கறுப்பு வெள்ளைப் படமாகவே பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கிரகத்தில் மலை உச்சியை படம் பிடித்த நாசாவின் ரோபோ - Reviewed by Author on August 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.