அண்மைய செய்திகள்

recent
-

மடு யாத்திரிகர்களை பாதிக்காத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது-மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் பந்துல்ல வீரசிங்க

நடைபெற்றுக் கொண்டிருக்கும் மடு தேவாலய விழாவை முன்னிட்டு பலத்த
பாதுகாப்புக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் சீசீடீ
கமராக்களும் படையினரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மன்னார்
பொலிஸ் அத்தியட்சகர் பந்துல்ல வீரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

மடு ஆலய பெருவிழாவை முன்னிட்டு வெள்ளிக் கிழமை (09.08.2019) மடு
திருப்பதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்ராஸ் தலைமையில் நடைபெற்ற மன்னார் ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை கலந்து கொண்ட கூட்டத்திலே மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் பந்துல்ல வீரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் பந்துல்ல வீரசிங்க மடு திருப்பதியில்
தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெருவிழாவக்கான பாதுகாப்பு
சம்பந்தமாக இங்கு தெரிவிக்கையில் இம்முறை மடு ஆலய பெருவிழா காலங்களில் பாதுகாப்பு நலன் கருதி முக்கிய இடங்களில் CCTVகமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதிகமான உளவுத்துறை பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஐந்து இடங்களில் ஆலய வளாகத்துக்குள் நுழைவோரை பரிசோதிக்க சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாகனங்களில் வருவோர் அவர்கள் தங்கும் இடங்களில் இறக்கிவிடப்பட்டபின் வாகனங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே நிறுத்தப்பட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு படையினர் கடமையில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மடு ஆலய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் பொலிஸ் மா அதிபதி சீ.டீ.விக்கிரமரட்ன இன்று (நேற்று வெள்ளிக் கிழமை) மடுவுக்கு வருகை தந்து சென்றுள்ளார்.

பக்தர்களை பாதிக்காத வகையில் பாதுகாப்பு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன என தெரிவித்தார்.

மடு யாத்திரிகர்களை பாதிக்காத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது-மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் பந்துல்ல வீரசிங்க Reviewed by Author on August 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.