அண்மைய செய்திகள்

recent
-

பௌத்த அடிப்படைவாதிகளினால் நீராவியடியில் செத்தது நீதி....அம்பாறை காரைதீவில் கண்டன பேரணி.

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற கட்டளையை அவமதிப்பு செய்த பேரினவாத பௌத்த அமைப்புக்கெதிராக  அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் கண்டன பேரணி இடம்பெற்றது .இன்று வெள்ளிக்கிழமை 27/09/2019  காலை 10 மணியளவில் இந்த போராட்டம்  வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களும் பொதுமக்களாலும் முன்னெடுக்கப்பட்டது.   

சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துக ,அனைத்துவிதமான பாரபட்சங்களை ஒழிக்குக ,சிறுபான்மையினர் மீதான துஷ்பிரயோகங்களை நிறுத்துக போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது.

  முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீதிதுறையை அவமதித்த தேரர்களை கைது செய்யகோரியும் இந்து ஆலயங்களின் புனித தன்மையை பாதுகாக்குமாறு தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  நீராவியடியில் செத்தது நீதி, நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுங்கள்,சட்ட ஆட்சியை நிலைநிறுத்துங்கள், போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.இதன்போது காரைதீவு சுவாமி விபுலாநந்தர் சதுக்கத்திலிருந்து பேரணியாக காரைதீவு பிரதேச செயலகம் வரை சென்று மீண்டும் சுவாமி  விபுலாநந்தர் சதுக்கத்தை வந்தடைந்து அம்பாறை மாவட்ட மனித உரிமைகள் இணைப்பாளர் ஏ .எல். இஸ்ஸதீன் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
இந்த கண்டன பேரணியில் , வடக்கு கிழக்கு சிவில் அமைப்பினர் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.










பௌத்த அடிப்படைவாதிகளினால் நீராவியடியில் செத்தது நீதி....அம்பாறை காரைதீவில் கண்டன பேரணி. Reviewed by Author on September 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.