அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அரச போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்-படங்கள்

இலங்கை அரச போக்குவரத்துச் ஊழியர்களுக்கு சம்பள சுற்றறிக்கையின் படி புதிய சம்பள முறை துரிதமாக நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்தி இலங்கை அரச போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை16/09/2019 தொடக்கம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி இலங்கை அரச போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை ஊழியர்களும் இன்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இன்றைய தினம் மன்னாரில் இருந்து உள்ளக மற்றும் வெளி மாவட்டங்களுக்கான அரச போக்குவரத்து சேவைகள் இடம் பெறவில்லை.

குறித்த அரச பேருந்து ஊழியர்களினுடைய வேலை நிறுத்ததின் காரணமாக பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் அதே நேரத்தில் மக்களின் சிரமங்களை குறைக்கும் முகமாக தனியார் சேவையில் மேலதிக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.



மன்னார் அரச போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்-படங்கள் Reviewed by Author on September 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.