அண்மைய செய்திகள்

recent
-

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் திட்டத்தில் நிர்மானிக்கப்படும் வீடுகளுக்கு நிதி விடுவிக்கப்படாமையால் பயனாளிகள் அதிதிருப்தி

மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால்
முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டங்களுக்கான நிதியினை
பயணாளிகளுக்கு வழங்கப்படாமையால் அதிகமான வீட்டுத் திட்ட பயணாளிகள் மன்னார் தேசிய வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்துக்கு படையெடுத்த வண்ணம் இருப்பதுடன் பணத்தை பெற்றுக் கொள்ளாது அதிதிருப்தியுடன் ஏமாற்றத்துடன் திரும்புவதாக பாதிப்படைந்தோர் கவலை தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளான மன்னார், நானாட்டான், முசலி மற்றும் மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 3285 வீட்டுத் திட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளை
மேற்கொள்ளும்போது தேசிய வீடமைப்பு அதிகார சபை குறிப்பிடப்பட்ட வீட்டின் ஒவ்வொரு கட்டுமானத்துக்கும் பகுதி பகுதியாக இதற்கான நிதியினை பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்ற திட்டத்திலே இவ் வீடமைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் மிகவும் வறுமை கோட்டுக்குள் வாழும் பெரும்பாலான பயனாளிகள்
கடன்பட்டு குறிப்பிட்ட மட்டம் வரைக்கும் கட்டிடங்களை அமைத்த பின்னரும்
தேசிய வீடமைப்பு அதிகார சபை குறிப்பிட்ட நிதியை விடுவிக்காமையால்
வழங்கப்பட்ட தங்கள் வீடுகளை பூர்த்தி செய்ய முடியாது தவிப்பதுடன் கட்டம்
கட்டமாக விடுவிப்பதாக தெரிவித்த நிதியையும் விடுவிக்காததால் பெரும்
சிரமங்களை பயனாளிகள் எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

இவ் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 2017 ம் ஆண்டு மன்னார்
பிரதேசப் பிரிவில் 8 மாதிரி கிராமங்களில் 261 வீட்டுத் திட்டங்களும்,
நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 3 மாதிரி கிராமங்களில் 80 வீடுகளும்,
மொத்தம் 341 வீடுகளும்

2018 ம் ஆண்டு மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் 34 மாதிரி கிராமங்களில்
627 வீடுகளும், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 13 மாதிரி
கிராமங்களில் 204 வீடுகளும் மொத்தம் 831 வீடுகளும் நிர்மானிப்பதற்கான
முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வருடங்களும் முன்னெடுக்கப்பட்ட இவ் வீட்டுத் திட்டங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா மானியமாக கட்டம் கட்டமாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இவ் நடப்பு வருடமாகிய 2019 ம் ஆண்டு மன்னார் பிரதேச செயலகப்
பிரிவில் 55 மாதிரி கிராமங்களில் 1536 வீடுகளும்.

நானாட்டான் பிரிவில் 10 மாதிரி கிராமங்களில் 216 வீடுகளும், முசலி
பிரிவில் 5 மாதிரி கிராமங்களில் 103 வீடுகளும், மாந்தை மேற்கு பிரிவில்
11 மாதிரி கிராமங்களில் 258 வீடுகளும் மொத்தம் 81 மாதிரி கிராமங்களில்
2113 வீடுகளும் நிர்மானிக்கப்ட்டு வருகின்றன.

இவ் வீட்டுத்திட்டங்களுக்கு தலா 7 ½ இலட்சம் ரூபா கட்டம் கட்டமாக
வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 139 மாதிரி
கிராமங்களிலும் 3285 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்பதும்
குறிப்பிடத்தக்கது.

-தங்களுக்கு நிதி கிடைக்கப் பெற்றதும் உடன் வழங்கப்பட வேண்டிய நிதியை
வழங்குவதாகவும் மன்னார் தேசிய வீடமைப்பு அதிகார சபை தங்களுக்கு
தெரிவிப்பதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.



தேசிய வீடமைப்பு அதிகார சபையின் திட்டத்தில் நிர்மானிக்கப்படும் வீடுகளுக்கு நிதி விடுவிக்கப்படாமையால் பயனாளிகள் அதிதிருப்தி Reviewed by Author on September 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.