அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறுபோகம் தத்துக்கிளி நோயால் பாதிப்பு....விவசாயிகள் கவலை....

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் சிறுபோக நெற்செய்கையில் தத்துக்கிளி தாக்கத்தால் பலருக்கு பாதிப்பு எற்பட்டு வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கமத்தொழில் திணைக்களத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அறிவுரையை கமக்காரர் பின்பற்றாமையாலேயே இவ் நிலை ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில்
நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற் செய்கையில் பல விவசாயிகளின் நெற் செய்கையில் தத்துக்கிளி தாக்கம் ஏற்பட்டு விவசாயம் பாதிப்பு அடைந்து வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

கமத்தொழில் திணைக்களத்தால் சிபாரிசு செய்யப்படும் மருந்துகள் தெளித்து
வருகின்றபோதும் சிலருக்கு அது நன்மையாக அமைவதாகவும் பலருக்கு பலனளிக்காத நிலையில் காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த அழிவுகள் பற்றி பாதிப்பு அடைந்துள்ள விவசாயிகள் இதுவரைக்கும்
எந்தவித கமநல சேவைகள் நிலையங்களிலோ அல்லது கமநல சேவைகள் மன்னார் திணைக்களத்திலோ அல்லது கமநல காப்புறுதி திணைக்களத்திலோ முறையீடு செய்யவில்லையென  இதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் பாதிப்பு அடைவதற்கும் நஷ;ட ஈடும் கோர முடியாதிருப்பதற்கு
முதற் காரணம் இவர்கள் விவசாய திணைக்களத்தால் வழங்கப்படும் அறிவுரையை பின்பற்றாது இருப்பதே காரணம் என இது சம்பந்தமான அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதாவது ஏற்கனவே விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ஒரு ஏக்கருக்கு இரண்டு புசல் நெல்லையே ஐதாக விதைப்பு செய்யும்போது தத்துக்கிளி தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டும் இவர்கள் ஒரு ஏக்கருக்கு மூன்று புசல் நெல்லை விதைப்பு செய்துள்ளமையால் செறிவாக உள்ள நெற்செய்கையில் தத்துக்கிளி தாக்கம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உரம் மானியமாக வழங்கப்படும் விவசாயிகளின் விவசாயம் வரட்சி, வெள்ளம் மற்றும் யானை இவற்றால் பாதிப்பு அடையும் விவசாயிகளுக்கு நஷ;டஈடு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் சிறுபோகம் செய்யும் விவசாயிகள் இது சம்பந்தமான விவசாயக் கூட்டத்தில்
எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு அமைய விவசாயத்தை மேற்கொள்ளுவதுடன்  ஒரு ஏக்கருக்கு 200 ரூபா செலுத்தி காப்புறுதி செய்யப்படும்போது இவர்களின் விவசாயம் பாதிப்பு ஏற்படும்போது இவர்களுக்கான நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் விவசாயிகள் கமத்தொழில் திணைக்களத்தின் அறிவுரைகளையும் நெற்செய்கை சம்பந்தமாக எடுக்கப்படும் தீர்மானங்களை தகுந்த முறையில் முன்னெடுத்துச்செல்லாமையாலே இவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக இது சம்பந்தமான அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் சிறுபோகம் தத்துக்கிளி நோயால் பாதிப்பு....விவசாயிகள் கவலை.... Reviewed by Author on September 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.